பயன்படுத்தவே தகுதியில்லாத சாலையால் மக்கள் அவதி!
19 Jan 2026, 2:23 pm
<p><strong>பயன்படுத்தவே தகுதியில்லாத சாலையால் மக்கள் அவதி!</strong></p>
<p>தருமபுரி, ஜன.19- வத்தல்மலையில் பயன்படுத் தவே தகுதியில்லாத நிலையிலுள்ள ஜல்லிக்கற்கள் நிரம்பிய சாலையை, தார்ச்சாலையாக மாற்றியமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். தருமபுரி மாவட்டத்திலுள்ள வத் தல்மலை, கடல் மட்டத்திலிருந்து 3 ஆயிரம் அடி உயரத்தில் உள்ளது. இங்கு காபி, மிளகு உள்ளிட்ட பயிர் கள் விளைவிக்கப்படுகிறது. 15 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட சாலையில் பயணித்தால் வத் தல்மலையை சென்றடையலாம். குளிர்ந்த காலநிலை நிலவி வருவ தால், வத்தல்மலை ‘மினி ஊட்டி’ என்றழைக்கப்படுகிறது. இம்மலைப் பகுதியில் 10க்கும் மேற்பட்ட கிரா மங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங் குள்ள மக்களின் தேவைகளுக்காக ரூ.10 கோடி ரூபாய் மதிப்பீட்டில், வத் தல்மலை அடிவாரம் முதல் நாயக்க னுார் வரை 12 கி.மீ., தார்ச்சாலை அமைக்கப்பட்டது. அதேபோல், மலைப்பகுதியில் ஆங்காங்கே உள்ள கிராமங்களுக்கு சிறு சிறு இணைப்புச் சாலைகள் அமைக்கப் பட்டது. இந்நிலையில், வத்தல்மலை யிலுள்ள சின்னாங்காடு முதல் பெரி யூர் வரையிலான ஒரு கிமீ நீள மண் சாலை, கடந்த 2024 ஆம் ஆண்டு மலைவாழ் மக்கள் மேம்பாட்டு திட்டத்தில், ரூ.42.42 லட்சம் மதிப் பீட்டில், ஜல்லி சாலையாக அமைக் கபட்டது. தற்போது, இச்சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து, வாக னங்கள் செல்ல தகுதியில்லாத சாலையாக மாறியுள்ளது. எனவே, ஜல்லிக்கற்கள் பெயர்ந் துள்ள சாலையை தார்ச்சாலையாக மாற்றியமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வவியுறுத்தியுள் ளனர். இச்சாலை மூலமாக, சின்னாங் காடு பகுதியிலிருந்து பெரியூருக்கு செல்லும் 3 கி.மீ., சுற்றிசெல்ல வேண் டிய சாலைக்கு மாற்றாக, ஒரு கி.மீ., துாரத்தில் பெரியூரை அடைந்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.</p>
