தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திமுக ஆட்சியில் மக்கள் தலை நிமிர்ந்துள்ளனர் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேச்சு

19 Feb 2026, 3:09 pm
திமுக  ஆட்சியில் மக்கள் தலை நிமிர்ந்துள்ளனர் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேச்சு
<p><strong>திமுக &nbsp;ஆட்சியில் மக்கள் தலை நிமிர்ந்துள்ளனர் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேச்சு</strong></p> <p>சிதம்பரம், பிப்.19 - &ldquo;தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி, தமிழகத்தைத் தலைநிமிரச் செய்துள்ளது&rdquo; என வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு. எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்கள் பேசினார். சிதம்பரத்தில் திமுக சார்பில் நடைபெற்ற &lsquo;தமிழ்நாடு தலைகுனியாது&rsquo; என்ற கண்டனப் பொதுக்கூட்டம் நகரக் கழகச் செயலாளரும், நகரமன்றத் தலைவருமான கே.ஆர். செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர் &nbsp;எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் தமிழ்நாடு பாட நூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவர் &nbsp;திண்டுக்கல் ஐ. லியோனி ஆகி யோர் கலந்துகொண்டு உரையாற்றினர். எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசுகை யில், &ldquo;முதலமைச்சர் &nbsp;மு.க. ஸ்டாலின் சிறப்பான ஆட்சியால் தமிழக மக்கள் இன்று தலைநிமிர்ந்து வாழ்கின்றனர். குறிப்பாக சிதம்பரம் நகரத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் மிக வேகமாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. வரும் தேர்தல்களிலும், கடந்த நகரமன்றத் தேர்தலில் பெற்ற முன்னிலை வாக்குகளை விட அதிக வாக்குகளைப் பெற்றுத் தரக் கட்சியினர் தீவிரமாகப் பணியாற்ற வேண்டும்.&rdquo; தொடர்ந்து பேசிய திண்டுக்கல் ஐ. லியோனி அவர்கள், தமிழக அரசின் கல்வி மற்றும் மக்கள் நலத்திட்டங்களைப் பாராட்டியதோடு, வரும் 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் திமுக மீண்டும் மகத்தான வெற்றி பெறும் எனத் தனது நம்பிக்கையைத் தெரிவித்தார். இப்பொதுக்கூட்டத்தில் மாவட்ட மற்றும் நகர நிர்வாகிகள், பல்வேறு அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.