முந்தய பக்கம்

விதிமுறைக்கு மாறான எரிசாராய ஆலையால் மக்களுக்கு பாதிப்பு

22 Dec 2025, 4:02 am
விதிமுறைக்கு மாறான எரிசாராய ஆலையால் மக்களுக்கு பாதிப்பு
<p>ஈரோடு, டிச. 22- பவானி அருகே தனியார் எரிசா ராய ஆலையின் விதிமுறைக்கு மாறான செயல்பாட்டால் பல்லாயி ரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட் டுள்ளதாக திங்களன்று ஈரோடு ஆட்சி யரிடம் முறையிட்டனர். சின்னபுலியூர், பெரியபுலியூர், வைரமங்கலம், எலமலை ஊராட்சி மக்கள் வாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளித்தனர். &nbsp;அம்மனுவில், பவானி அருகே சின்ன புலியூர் கிராமத்தில் பண்ணாரி அம் மன் சர்க்கரை ஆலைக்குச் சொந்த மான எரி சாராய ஆலை செயல்பட்டு &nbsp;வருகிறது. இந்த ஆலையிலிருந்து வெளியேறும் கழிவு நீரினை பவானி &nbsp;ஆற்றில் கலந்து வந்தனர். இதற் கெதிரான தொடர் போராட்டத்தின் காரணமாக ஆலைக்கு உள்ளேயே தேக்கி வைத்தனர். இவ்வாறு தேக்கி &nbsp;வைக்கப்பட்ட கழிவு நீர் துர்நாற்ற மடைந்து சுற்றுவட்டார மக்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தி வரு கிறது. குறிப்பாக நுரையீரல் தொற்று, &nbsp;முச்சுத்திணறல் மற்றும் புற்றுநோய் &nbsp;ஏற்பட்டு சில மரணங்கள் நிகழ்ந்துள் ளது. பலர் நடைபிணமாகவும் மாற்றப் பட்டுள்ளனர். சுற்றுவட்டார கிணற்று &nbsp;நீர் மாசுபட்டதால் கால்நடைகளும், விவசாயப் பயிர்களும் பாதிக்கப்பட் டன. &nbsp; இதனால் ஆலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், முதலமைச்சர் உள்ளிட்ட பல் வேறு மட்டங்களில் புகார் மனுக்கள் அனுப்பி வைத்தனர். &nbsp;நீதிமன்ற உத்த ரவு பெற்று உண்ணாவிரத போராட்ட மும் நடத்தப்பட்டது. இந்நிலையில் மக்கள் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு விதிமுறைக்கு மாறான ஆலையின் செயல்பாடுகளை தடுத்து நிறுத்தி, ஆலையிலிருந்து வெளியேற்றப்படும் நச்சுப்புகை யினை நிறுத்த வேண்டுமென அம் மனுவில் தெரிவித்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram