ராமச்சந்திராபுரத்தில் மக்கள் ஒற்றுமை விளையாட்டு போட்டி
27 Jan 2026, 3:28 pm
<p><strong>ராமச்சந்திராபுரத்தில் மக்கள் ஒற்றுமை விளையாட்டு போட்டி</strong></p>
<p>உடுமலை, ஜன.27- மக்கள் ஒற்றுமையை பாதுகாக்கும் வகையில் ராமச்சந்திராபுரத்தில் இந் திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் திங்களன்று விளையாட்டு போட்டிகள் நடத்தினர். வாலிபர் சங்க விளையாட்டு கழக நிர்வாகி ரமேஷ் தலைமையில் விளை யாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. சங் கத்தின் மாவட்டச் செயலாளர் பால முரளி, மாவட்ட இணைச் செயலாளர் பிரவீன்குமார், சிஐடியு சங்கத்தின் விஸ் வநாதன், ஜெகதீசன், ரங்கநாதன் விவ சாயத் தொழிலாளர் சங்கத்தின் கனக ராஜ், விவசாய சங்கத்தின் விஜயகுமார், மாதர் சங்கத்தின் ரேணுகாதேவி, வாலி பர் சங்கத்தின் நிர்வாகிகள் கருப்பு சாமி, மாசாணி, மாணவர் சங்கத்தின் அற வாழி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்க ளுக்கு முன்னாள் தலைமை ஆசிரியர் ஜெயபிரகாசம், பொறியாளர் குருநா தன், தென்னை விவசாயிகள் சங்கத் தின் மாவட்டப் பொருளாளர் திருமலை சாமி, முன்னாள் தலைமை ஆசிரியர் வெங்கடாசலம் உள்ளிட்டோர் பரிசுகள் வழங்கினர். அதேபோல் அனுப்பர்பாளையம், கோகுலம் காலனி செவன்த்டே அட்வென்டிஸ்ட் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற 77 ஆவது குடியரசு தின விழாவில் பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் சிறப்பு அழைப்பாளர்களை வரவேற்றனர். தேசியக் கொடியை எஸ்.ஆறுமுக சாமி ஏற்றி வைத்தார். சிறப்பு விருந்தி னராகப் பங்கேற்ற தொழிற்சங்கத் தலை வர் அ.ஆறுமுகம் சிறப்புரையாற்றி னார். பள்ளியில் நடைபெற்ற விளை யாட்டு விழாவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்க்கு ஏ.முத்துகு மார், கமலகண்ணன் ஆகியோர் பதக் கங்களை வழங்கிச் சிறப்பித்தனர். அதேபோல் 15 வேலம்பாளையம் மஸ்ஜிதே இக்லாஸ் அறக்கட்டளை வளாகம் முன்பு, குடியரசு தின விழாவை முன்னிட்டு தேசியக்கொடி ஏற்றப்ப டது. மஸ்ஜிதே இக்லாஸ் அறக்கட்டளை தலைவர் அப்துல் சமது தலைமை யில் செயலாளர் முகமது ரஃபி வரவேற் றார். பொருளாளர் முகமது சித்திக் நன்றி கூறினார்.</p>
