முந்தய பக்கம்

குலாம் காதர் லே அவுட்டில் மக்கள் ஒற்றுமை விளையாட்டு விழா

28 Jan 2026, 2:33 pm
குலாம் காதர் லே அவுட்டில் மக்கள் ஒற்றுமை விளையாட்டு விழா
<p><strong>குலாம் காதர் லே அவுட்டில் மக்கள் ஒற்றுமை விளையாட்டு விழா</strong></p> <p>திருப்பூர், ஜன.28 &ndash; இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திருப்பூர் குலாம் &nbsp;காதர் லே அவுட் கிளை சார்பில் நான்காம் ஆண்டு மக்கள் &nbsp;ஒற்றுமை விளையாட்டு விழா குடியரசு தினத்தன்று நடத்தப் பட்டது. பாலமுருகன் நகர் 3ஆவது வீதி தோழர் கந்தசாமி நினை வுத் திடலில் இவ்விழா நடைபெற்றது. இதில் தேசிய கொடியை கோபால், வாலிபர் சங்கக் கொடியை மகேஷ்கு மார் ஆகியோர் ஏற்றி வைத்தனர். விளையாட்டு போட்டிகளை &nbsp;வழக்கறிஞர் வினோத்குமார் தொடக்கி வைத்தார். பெண்கள் &nbsp;கோலப்போட்டி, சிறுவர், சிறுமியர், ஆண்கள், பெண்களுக் கான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. கிளைத் தலைவர் தமிழரசன் தலைமையில் பரிசளிப்பு &nbsp;விழா நடைபெற்றது. இதில் வாலிபர் சங்க மாநிலத் தலைவர் &nbsp;செல்வராஜ், மாணவர் சங்க மாநிலச் செயலாளர் சம்சீர் &nbsp;அகமது ஆகியோர் பரிசளித்து சிறப்புரை ஆற்றினர் மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் செ.முத்துக் கண்ணன், மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், வாலிபர் &nbsp;சங்க மாவட்டத் தலைவர் நிருபன் சக்கரவர்த்தி, மாவட்டச் செயலாளர் பாலமுரளி உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்திப் &nbsp;பேசினர். இவ்விழாவில் பகுதி பொது மக்கள் 300க்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram