விருதுநகரில் வாலிபர், மாதர் சங்கங்கள் நடத்திய மக்கள் ஒற்றுமை பொங்கல் விளையாட்டு விழா
20 Jan 2026, 2:46 pm
<p><strong>விருதுநகரில் வாலிபர், மாதர் சங்கங்கள் நடத்திய மக்கள் ஒற்றுமை பொங்கல் விளையாட்டு விழா</strong></p>
<p>விருதுநகர், ஜன.20- விருதுநகரில் தூய்மைப் பணியாளர் குடியிருப்பு, பாத்திமாநகர், நீராவித் தெரு ஆகிய பகுதிகளில் மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தி பொங்கல் விளையாட்டு விழாக்கள் நடைபெற்றன. இந்திய ஜனநாயக வாலி பர் சங்கம் சார்பில் நீராவித் தெருவில் நடபெற்ற விளை யாட்டு விழாவிற்கு நகரத் தலைவர் எம்.குமார் தலைமை தாங்கினார். முத்துக் கண் ணன் வரவேற்புரையாற்றி னார். பரிசுகளை ரத்ததான கழகச் செயலாளர் எம்.மாரி முத்து, தங்கப்பாண்டியன், ஆர்.மாரிக்கனி ஆகியோர் வழங்கினர். நகர பொருளா ளர் பொன்பாண்டி சிறப்புரை யாற்றினார். ராஜா நன்றி கூறி னார். கார்த்திக்பாபு உட்பட பலர் பங்கேற்றனர். பாத்திமாநகரில் ஜெ. ஜீவா தலைமை தாங்கினார். நகர்குழு உறுப்பினர் எம்.சத்யஜித் வரவேற்றார். எஸ். சத்யா முன்னிலை வகித்தார். போட்டியை நகர்மன்ற உறுப்பினர் கே.ஜெயக் குமார் துவக்கி வைத்தார். முன்னாள் மாவட்டச் செயலா ளர்கள் எல்.முருகன், எம்.ஜெயபாரத் ஆகியோர் பரிசு களை வழங்கினர். முன்னாள் மாவட்ட பொருளாளர் பி. ராஜா சிறப்புரையாற்றினார். எம்.பாரதி நன்றி கூறினார். முன்னதாக குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றன. அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கம் சார்பில் தூய்மைப் பணியாளர் குடி யிருப்பில் நடைபெற்ற இந் நிகழ்விற்கு கார்த்திகைச் செல்வி, மகேஸ்வரி ஆகி யோர் தலைமை தாங்கினர். நகரச் செயலாளர் வி. ராஜேஸ்வரி வரவேற்றார். போட்டியை நகர்மன்ற உறுப்பினர் ஆர்.பி.மதியழ கன் துவக்கி வைத்தார். மாதர் சங்க மாவட்டச் செயலாளர் என்.உமாமகேஸ்வரி பரிசு களை வழங்கினார். வாலிபர் சங்க முன்னாள் நகரத் தலை வர் பி.கருப்பசாமி விளக்கிப் பேசினார்.</p>
