மக்கள் ஒற்றுமை சமத்துவ பொங்கல் விழா
18 Jan 2026, 4:50 pm
<p><strong>மக்கள் ஒற்றுமை சமத்துவ பொங்கல் விழா</strong></p>
<p>நாமக்கல், ஜன.18- பள்ளிபாளையம் மற்றும் பவானி பகுதிகளில் மக்கள் ஒற்றுமை பொங்கல் விழா சனியன்று நடை பெற்றது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில், 28 ஆம் ஆண்டு மக்கள் ஒற்றுமை விளையாட்டு விழா சனி யன்று நடைபெற்றது. இவ்விழாவில் சங்கத்தின் மாவட் டத் தலைவர் எம்.நவீன், மாவட்டச் செயலாளர் எஸ். சரவணன், ஒன்றியத் தலைவர் எஸ்.பூபாலன், விழாக் குழு செயலாளர் ஆர்.லெனின் உட்பட பலர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் ஏராளமான பொதுமக்களும், குழந்தைக ளும் கலந்து கொண்டனர். இதேபோன்று, ஈரோடு மாவட்டம், பவானி பகுதியில் சனியன்று சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில், சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில் திரளானோர் கலந்து கொண்ட னர்.</p>
