தயார் நிலையில் உள்ள பட்டாவை வழங்காத கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் நெறிக்குறவர் மக்கள் முற்றுகை போராட்டம்
9 Feb 2026, 3:02 pm
<p><strong>தயார் நிலையில் உள்ள பட்டாவை வழங்காத கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் நெறிக்குறவர் மக்கள் முற்றுகை போராட்டம்</strong></p>
<p>திருவள்ளூர், பிப்.9- தயாராக உள்ள பட்டா-வை கால தாமதம் செய்யாமல் நரிக்குறவர் இன மக்க ளுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தி திங்களன்று (பிப் 9), கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவ லகத்தை மலைவாழ் மக்கள் சங்கத்தினர் முற்றுகையிட்டனர். கும்மிடிப்பூண்டி பேரூராட்சி 11-வது வார்டில் சுமார் 60 ஆண்டுகளாக 23 நெறிக்குறவர் இன குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இங்கு வசிக்கும் அனைத்து குடும்பங்களுக்கு பட்டா வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. கோரிக்கை மனுக்கள் கொடுத்தும், போராட்டங்கள் நடத்தியும் இதுவரை அந்த மக்களுக்கு பட்டா கிடைக்கவில்லை. கடந்த டிசம்பர் 18 அன்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வர்கள் கலந்து கொண்ட காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் நிறைவில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் பேச்சுவார்த்தை நடை பெற்றது. அப்போது கும்மிடிப்பூண்டி பேரூ ராட்சியில் வசிக்கும் நெறிக்குறவர் இன மக்களுக்கு இன்னும் ஒரு வாரத்தில் பட்டா வழங்கப்படும். அதற்கான தயாரிப்பு பணி கள் நிறைவடைந்துவிட்டதாக கூறினார். இந்த நிலையில் பட்டா வழங்க காலதாமதம் ஆகியதால் திங்களன்று (பிப் 9), தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் நெறிக்குறவர்கள் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலு வலகத்தை முற்றுகையிட்டு துணை வட்டாட்சியரிடம் தலைவர்கள் பேசினர். அப்போது பட்டா வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் பிப்.16 அன்று வட்டாட்சியர் அலுவலகம் முன் பட்டா கிடைக்கும் வரை காத்திருக்கும் போராட்டம் நடைபெறும் என்று சங்க தலைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.தமிழ்அரசு, மாவட்ட குழு உறுப்பினர் அஜித், சிபிஎம் வட்டச் செயலாளர் டி.கோபாலகிருஷ்ணன், மாவட்ட குழு உறுப்பினர் இ.ராஜேந்திரன், வட்ட குழு உறுப்பினர்கள் ப.லோகநாதன், வி.ஜோசப், வி.குப்பன், வாலிபர் சங்கத்தின் கவரைப்பேட்டை பகுதி செயலாளர் வசந்த் பௌத்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.</p>
