திருச்சி விரைவு செய்திகள்
1 Dec 2025, 5:20 pm

மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

புதுக்கோட்டை, டிச.1- புதுக்கோட்டை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டா மாறுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 430 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். இம்மனுக்களின் மீது விசாரணை மேற்கொள்ள, சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ. ராஜராஜன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) எஸ். திருமால், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பா. ஜெயசுதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பொறையார் உப்பனாற்றில் ஆகாயத்தாமரை செடிகள் அகற்றம்

மயிலாடுதுறை, டிச.1- மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் உப்பனாற்றில் மழை வெள்ளநீர் வடிவதற்கு இடையூறாக மண்டிக் கிடந்த ஆகாயத்தாமரை செடிகள் நீர்வளத்துறை அதிகாரிகள் மேற்பார்வையில் அகற்றப்பட்டது. புயல் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளநீர் பல்வேறு கிளை வாய்கால்கள் வழியாக பிரதான ஆறுகள் மூலம் உப்பனாற்றில் கலந்து தரங்கம்பாடி கடலில் கலக்கிறது. வெள்ளநீர் தடையின்றி கடந்து செல்ல பல்வேறு குப்பை கழிவுகள், மரம், செடி கொடிகள் மற்றும் வெள்ளநீரில் அடித்து வரும் ஆகாயத் தாமரைகளையும், ஆற்றில் மண்டிக்கிடந்த ஆகாயத்தாமரை செடிகளையும் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அகற்றும் பணியில் ஈடுப்பட்டனர். இப்பணிகளை நீர்வளத்துறை மாவட்ட மற்றும் பிரிவு அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பேராவூரணி அருகே 100 ஆண்டு பழமையான அரசமரம் வேரோடு சாய்ந்தது

தஞ்சாவூர், டிச.1- தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே 100 ஆண்டு பழமை வாய்ந்த அரசமரம் வேரோடு சாய்ந்தது. டிட்வா புயல் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக பேராவூரணி சுற்றுவட்டார பகுதிகளில் இடைவிடாமல் தொடர் மழை காற்று வீசி வருகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த தொடர்மழை காற்றின் காரணமாக செருவாவிடுதி தெற்கு ஊராட்சியில் சிவசித்தி பிள்ளையார் கோவில் அருகே, 100 ஆண்டு பழமை வாய்ந்த அரசமரம் வேரோடு சாய்ந்தது. நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. எனினும் அருகில் இருந்த இரண்டு கடைகள் சேதமடைந்தன. 2018 கஜா புயலின் போது அரசமரத்தின் கிளைகள் மட்டும் முறிந்த நிலையில் மரம் வேரோடு நின்றது குறிப்பிடத்தக்கது.

மரம் வளர்ப்போம்! சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம்!