தருமபுரியில் சிபிஎம் சார்பில் மக்கள் கோரிக்கை மாநாடு
21 Dec 2025, 3:21 pm
<p><strong>தருமபுரியில் சிபிஎம் சார்பில் மக்கள் கோரிக்கை மாநாடு</strong></p>
<p>தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாபெரும் மக்கள் கோரிக்கை மாநாடு நடைபெற்றது. காவிரி உபரிநீர் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், தொழிற்பேட்டை அமைக்க வேண்டும்; நீண்டகாலமாக குடியிருப்போருக்கு பட்டாவும், வீடு இல்லாதவர்களுக்கு வீட்டுமனையும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி. மாதன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர் செ.முத்துக்கண்ணன், மாநிலக்குழு உறுப்பினர் ஏ. குமார், மாவட்டச் செயலாளர் இரா. சிசுபாலன், மூத்த தலைவர் பி. இளம்பரிதி, மேற்கு ஒன்றியச் செயலாளர் ஆ. ஜீவானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.<br />
</p>
