முந்தய பக்கம்

சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்கள் போராட்டம்

yesterday
சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்கள் போராட்டம்
<p><strong>சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்கள் போராட்டம்</strong></p><p><strong>சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்கள் போராட்டம்</strong> அனைத்து சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் தங்களின் கோரிக்கைகளை வலி யுறுத்தித் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் மாவட்டத் தலைவர் சி. மச்சேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் டி. புருஷோத்தமன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரை யாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில், சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கான ஓய்வூதிய உயர்வு குறித்த தமிழக அரசின் அரசாணை எண் 41-ஐ, பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் உடனடி யாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோரப்பட்டது. மேலும், தற்போதைய வாழ்க்கைச் செலவுகளை ஈடுகட்ட ஏதுவாக, குறைந்தபட்ச ஓய்வூதியமாக மாதம் ரூ.7,850 வழங்க வேண்டும் என்றும், குடும்ப ஓய்வூதியத் தொகையை உயர்த்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இத்துடன், ஓய்வூதியர்களுக்கு மருத்துவப்படி வழங்குவது, முழுமையான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்துவது மற்றும் பண்டிகைக் காலங்களில் முன்பண உதவி வழங்குவது போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலர் ஏ. பாவாடை, துணைத் தலைவர் ஏ. சுந்தர மூர்த்தி, இணைச் செயலர்கள் எஸ். கருணா கரன், பி. புவனேஷ்வரி உள்ளிட்ட சங்க நிர்வாகி கள் மற்றும் உறுப்பினர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram