முந்தய பக்கம்

உளுந்தூர்பேட்டையில் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

12 Dec 2025, 3:12 pm
உளுந்தூர்பேட்டையில் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
<p>கள்ளக்குறிச்சி, டிச. 12- 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உளுந்தூர்பேட்டை நகராட்சி அலுவலகம் முன்பு, தமிழ்நாடு பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி அனைத்து ஓய்வூதியர் நல அமைப்பு சார்பில் வியாழனன்று (டிச. 11) &nbsp;கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி அனைத்து ஓய்வூ தியர்களுக்கும் சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்யவேண்டும், ஓய்வூதியதாரர்கள் இறந்தால் அவர்களது குடும்பத்திற்கு ரூ. 50ஆயிரம் இறப்பு கால நிதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மாவட்ட அமைப்புக்குழுச் செயலாளர் இ.ராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலாளர் டி.தமிழ்மணி வரவேற்புரை ஆற்றினார். சிஐடியு மாவட்ட நிதிகாப்பாளர் கே.சீனு வாசன் துவக்கி வைத்துப் பேசினார். நகராட்சி சங்க கவுரவத் தலைவர் கே.தங்க ராசு, உள்ளாட்சி ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் எ.வீராசாமி ஆகியோர் விளக்கமளித்துப் பேசினர். மாநில அமைப்புச் செயலாளர் எம்.ராஜேந்திரன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். டி.என்.ஜி.பி.ஏ. வட்டத் தலைவர் கே.தங்க வேல் நிறைவுரையாற்றினார். கே.ஊமைத் துரை நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram