பென்சன் திருத்த மசோதாவை கண்டித்து புதுச்சேரியில் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
17 Dec 2025, 4:11 pm
<p><strong>பென்சன் திருத்த மசோதாவை கண்டித்து புதுச்சேரியில் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>புதுச்சேரி, டிச.17- பென்சனுக்கு வேட்டுவைக்கும் ஒன்றிய பாஜக அரசின் பென்சன் திருத்த மசோதாவை கண்டித்து புதுச்சேரியில் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஓய்வூதியர்களுக்கு பாதிப்பை உருவாக்கும் வகையில் நிதி மசோதாவில் பென்சன் திருத்த சட்டத்தை நிறைவேற்றியுள்ளதை ஒன்றிய பாஜக அரசு திரும்ப பெறவேண்டும்.அனைத்து ஓய்வூதியர்களுக்கும் பாரபட்சமின்றி 1.1.2026 முதல் 8 வது ஊதியக்குழு பரிந்துரை களை அமல்படுத்த வேண்டும் என்பன கோரிக்கைகளை முன்வைத்து புதனன்று (டிச.17) ஓய்வூதியர் தினத்தில் இப்போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரி சுதேசி பஞ்சாலை எதிரில் நடை பெற்ற தர்ணா போராட்டத்திற்கு பென்சனர்கள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். புதுச்சேரி பென்சனர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன் தர்ணா போராட்டத்தை துவக்கி வைத்து பேசினார். பென்சனர்கள் சங்கங்களின் தலைவர்கள் சண்முகம், ராம சாமி, விஸ்வநாதன், கலியமூர்த்தி, ஆனந்த கணபதி, ராமகிருஷ்ணன், காமராஜ் உள்ளிட்ட திரளான பென்சனர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர். முன்னதாக கோரிக்கைகளை வலியுறுத்தி பென்சனர்கள் கோரிக்கை முழக்கங்களை எழுப்பினார்கள்.</p>
