ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
1 Oct 2026, 12:49 am
<p><strong>ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்</strong></p><p>கூடலூர், செப்.30-பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட 18 மாத அகவிலைப்படியை வழங்க வேண்டும். 2027 ஜனவரி 1 ஆம் தேதிக்கு முன்னர் ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர் செவ்வாயன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டம், கூடலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் வட்ட கிளைத் தலைவர் ஜி.வர்கீஸ் தலைமை வகித்தார். செயலாளர் விஷ்ணுதாசன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். இதில், ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் சங்க மாவட்டத் தலைவர் பரமேஸ்வரன், அரசு ஊழியர் சங்க மாவட்டச்செயலாளர் சிவபெருமாள், கல்வித்துறை ஓய்வூதியர் சங்கப் பொறுப்பாளர் ரகுபதி உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், மகளிர் துணைக்குழு அமைப்பாளர் பிரபாவதி நன்றி கூறினார்.</p>
