தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கூடுதல் ஓய்வூதியம் வழங்கக்கோரி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

27 Jan 2026, 3:28 pm
கூடுதல் ஓய்வூதியம் வழங்கக்கோரி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
<p><strong>கூடுதல் ஓய்வூதியம் வழங்கக்கோரி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்</strong></p> <p>தருமபுரி, ஜன.27- 70 வயதை கடந்த ஓய்வூதி யர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்கக்கோரி அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். சத்துணவு மற்றும் அங்கன்வாடி &nbsp;ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓயவூதியமாக ரூ.7850 வழங்க &nbsp;வேண்டும். ஓய்வுபெற்றவர்க ளுக்கு கமுட்டேசன் பிடித்தம் 11 &nbsp;ஆண்டுகளாக குறைக்க வேண்டும் &nbsp;உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தினர் செவ் வாயன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். தருமபுரி மாவட்டம், நல் லம்பள்ளியில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு சங்கத்தின் வட்டத் தலைவர் ஜி.குணசேகரன் தலைமை வகித்தார். சத்துணவு மற் றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க &nbsp;மாவட்டச் செயலாளர் சி.காவேரி, &nbsp;ஓய்வூதியர் சங்க மாவட்ட இணைச் செயலாளர் இ.கிருஷ்ணமூர்த்தி, ஜாக்டோ - ஜியோ நிதி காப்பாளர் கே.புகழேந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர். தருமபுரி வட்டாட்சி யர் அலுவலகம் முன்பு நடைபெற்ற &nbsp;ஆர்ப்பாட்டத்திற்கு, வட்டத் தலை வர் மணி தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் எஸ்.பழனிச் சாமி கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். இதேபோல், பென்னா கரத்தில் வட்டத் தலைவர் விஜயரங் கன், அரூரில் வட்டத் தலைவர் பத்ம நாபன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் &nbsp;ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலா ளர் எம்.பெருமாள், மாவட்டப் பொருளாளர் கேசவன் உட்பட பலர் &nbsp;கலந்து கொண்டனர். கோவை கோவை மாவட்டம், மேட்டுப் பாளையத்தில் திங்களன்று ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. தொடர்ந்து, செவ்வாயன்று மாவட்டத்திலுள்ள 9 தாலுகாக்களிலும் ஆர்ப்பாட்டம் &nbsp;நடைபெற்றது. வட்டக் கிளை &nbsp;தலைவர்கள் தலைமையில் நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டங்களில் சங்கத்தின் மாநில துணைத்தலை வர் என்.அரங்கநாதன், மாநிலச் செயலாளர் கே.பழனிசாமி, மாவட் டத் தலைவர் எஸ்.மதன், செயலா ளர் கே.அருணகிரி, இணைச்செய லாளர்கள் கே.ஜானகி, எஸ்.ஏசை யன், துணைத்தலைவர்கள் காந்தி மதி, இளவரசு உட்பட பலர் கலந்து &nbsp;கொண்டனர். நாமக்கல் நாமக்கல் பூங்கா சாலைப்பகுதி யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, வட்டத் தலைவர் பி.அன்புக் குமார் தலைமை வகித்தார். சேந்த மங்கலம் வட்டச் செயலாளர் கோ. கிருஷ்ணசாமி வரவேற்றார். நாமக் கல் வட்டச் செயலாளர் கு.ராஜேந் திர பிரசாத் கோரிக்கைகளை விளக் கிப் பேசினார். இதில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆ.குப்பு சாமி, பொருளாளர் பி.கே.பெரிய சாமி மாவட்ட நிர்வாகிகள் பி.கே. ராமசாமி, கே.சின்னுசாமி, கே. கருப்பன் மற்றும் தோழமை சங்க &nbsp;நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து &nbsp;கொண்டனர். முடிவில், பரமத்தி வேலூர் வட்டத் தலைவர் யோகானந்தம் நன்றி கூறினார். ஈரோடு ஈரோடு வட்டாட்சியர் அலுவலக &nbsp;வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு சங்கத்தின் வட்டச் செய லாளர் திருஞானசம்பந்தம் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் வ.பன்னீர்செல்வம் துவக் கவுரையாற்றினார். அரசு ஊழியர் சங்க மேனாள் மாநிலத் தலைவர் க. ராஜ்குமார் வாழ்த்திப் பேசினார். இதில் சங்க நிர்வாகிகள் சங்கரன், மணியன், கிருஷ்ணமூர்த்தி, மணி பாரதி, அப்துல் பாஷீத் உட்பட பலர் கலந்து கொண்டனர். சேலம் சேலம் கோட்டை மைதானத் தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, ஓய்வூதியர் சங்க சூரமங்க லம் வட்டக்கிளை தலைவர் பொன்னரசன் தலைமை வகித்தார். &nbsp;இதில் சங்கத்தின் மாவட்டத் தலை வர் அருள்மொழி, மாநில செயற் குழு உறுப்பினர் கோவிந்தசாமி உட் பட பலர் கலந்து கொண்டனர். ஓம லூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில் சங்கத்தின் மாவட்டச் செய லாளர் ராஜ்குமார் பங்கேற்றார். இதேபோல் வாழப்பாடி, பெத்த நாயக்கன்பாளையம், ஆத்தூர், சங்ககிரி, எடப்பாடி, மேட்டூர் உள் ளிட்ட பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.