ஓய்வூதியர்கள் தர்ணா போராட்டம்
30 Sept 2026, 12:04 am

ஓய்வூதியர்கள் தர்ணா போராட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல், 70 வயது முடித்த ஓய்வூதியர்களுக்கு 10 சதவீத கூடுதல் ஓய்வூதியம் வழங்குதல் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூரில் ஓய்வூதியர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். மாவட்டத் தலைவர் ஆர்.மனோகரன் தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர் ஜி.பழனி துவக்க உரையாற்றினார்

திருவண்ணாமலையில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தர்ணா போராட்டத்தில் மாவட்ட தலைவர் ப. கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட செயலாளர் எஸ். பச்சையப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நில அளவை அலுவலர்களுக்கு நிரந்தர பணி பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சிறப்பு பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றக் கோரி, தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் சரவணன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்த்தில் மாவட்டச் செயலாளர் நீலராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.