பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திடுக ஓய்வூதியர் சங்க ஒருங்கிணைப்புகுழு தர்ணா
23 Sept 2026, 12:01 am

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திடுக ஓய்வூதியர் சங்க ஒருங்கிணைப்புகுழு தர்ணா

கோவை, செப்.22-ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டங்களை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய, மாநில மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் கோவை சிவானந்தா காலனியில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

பென்ஷன் வேலிடேஷன் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.8 ஆவது ஊதியக் குழுவில் ஓய்வூதியம் தொடர்பான அம்சங்களை சேர்க்க வேண்டும். பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் ஓய்வூதியர்களுக்கு 2017 முதல் வழங்க வேண்டிய உயர்வை அறிவிக்க வேண்டும். வங்கி ஓய்வூதியர்களுக்கும் ஓய்வூதிய உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி மத்திய, மாநில மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் கோவை சிவானந்தா காலனியில் செவ்வாயன்று தர்ணா போராட்டம் நடைபெற்றது.இப்போராட்டத்திற்கு (என்சிபிஏ) டி.எல்.வெங்கட்ராமன் கோவை, (எப்சிபிஏ) சார்பில் சி.பரமசிவம் - ஈரோடு, கே.ஆர்.கணேசன் - சேலம், பி.சுப்பிரமணியம் - தருமபுரி மற்றும் பி.கே.இராமசாமி - நாமக்கல் ஆகியோர் தலைமை வகித்தனர்.

ஒருங்கிணைப்புக் குழுவின் மாவட்டச் செயலாளர் என். அரங்கநாதன் துவக்கவுரையாற்றினார். சிவில் ஓய்வூதியர் கூட்டமைப்பு மேற்கு மண்டல கன்வீனர் எஸ். கருணாநிதி கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினார். சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, ஏஐடியுசி செயலாளர் சி.தங்கவேல் ஆகியோர் போராட்டத்தினை வாழ்த்தி உரையாற்றினர்.இப்போராட்டத்தில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி, நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான ஓய்வூதியர்கள் கலந்துகொண்டனர். நிறைவாக ஒருங்கிணைப்புக் குழுவின் பொருளாளர் ஏ. குடியரசு நன்றி கூறினார்.

இபிஎஸ் 95இதேபோன்று, உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தகுதி உள்ள அனைவருக்கும் உயர் பென்

ஷன் வழங்க வேண்டும். தொழிலாளர்கள் சேமிப்புத் தொகையான வருங்கால வைப்பு நிதியை பங்கு மார்க்கெட் சூதாட்டத்தில் முதலீடு செய்வதை தடுக்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட இபிஎஸ் 95 பென்ஷனர்கள் நலச்சங்கத்தினர் கோவை மண்டல இபிஎஃப் அலுவலகம் முன்பு செவ்வாயன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்டத் தலைவர் பி.என்.பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், அகில இந்திய கவுன்சில் உறுப்பினர் ஏ.ஆர்.துரைசாமி, மாவட்டச் செயலாளர் கே. குமாரசாமி உள்ளிட்டோர் உரையாற்றினர். முடிவில் பொருளாளர் எஸ்.ஆர். மணி நன்றி கூறினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.ஆர்ப்பாட்டத்தின் நிறைவாக, மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையரிடம் அமைப்பின் நிர்வாகிகள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.