முந்தய பக்கம்

ஒன்றிய அரசை கண்டித்து பென்சனர்கள் ஆர்ப்பாட்டம்

16 Feb 2026, 2:37 pm
ஒன்றிய அரசை கண்டித்து பென்சனர்கள் ஆர்ப்பாட்டம்
<p><strong>ஒன்றிய அரசை கண்டித்து பென்சனர்கள் ஆர்ப்பாட்டம்</strong></p> <p>கோவை, பிப்.16- ஒன்றிய அரசின் பட்ஜெட் டில் தங்களுக்கு இழைக் கப்பட்ட அநீதியை கண் டித்து கோவையில் பென்ச னர் சங்கத்தினர் திங்களன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். குறைந்தபட்ச ஓயவூதி யமாக அகவிலைப்படியு டன் சேர்த்து மாதம் ரூ. 9 ஆயிரம் வழங்க வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப் படையில் தகுதியுள்ள அனைவருக்கும் உயர் பென்ஷன் வழங்கப்பட வேண்டும். மூத்த குடிமக்களுக்கு பறிக்கப்பட்ட ரயில்வே கட்டணச் சலுகையை மீண்டும் அமல்படுத்த வேண்டும். மிகக் குறைந்த ஓய்வூதியம் பெறும் இபிஎஸ் பென்சனர்களுக்கு, தமி ழக அரசு தனது சமூகப் பாதுகாப்புத் திட்டத் தின் கீழ் கூடுதலாக மாதம் ரூ. 2 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி அகில இந்திய யுனை டெட் ஆக்ஷன் கமிட்டி ஆப் இபிஎப்எஸ் 95 &nbsp;பென்சனர் அசோசியேஷன் மற்றும் கோவை &nbsp;இபிஎப் பென்சனர் நலச்சங்கம் சார்பில், திங்களன்று கோவை மண்டல இபிஎஃப் அலு வலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கோவை &nbsp;மாவட்டத் தலைவர் பி.என்.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கே. குமாரசாமி முன்னிலை வகித்தார். அகில இந்திய கவுன்சில் உறுப்பினர் ஏ. ஆர். துரைசாமி கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினார். சிஐடியு மாவட்டச் செயலா ளர் எஸ். கிருஷ்ணமூர்த்தி, எச்எம்எஸ் மாநி லச் செயல் தலைவர் டி.எஸ் ராஜாமணி, ஏஐடி யுசி மாவட்ட பொதுச்செயலாளர் சி.தங்க வேலு ஆகியோர் உரையாற்றினர். முடிவில் பொருளாளர் எஸ்.ஆர். மணி நன்றி கூறி னார். ஆர்ப்பாட்டத்தின் முடிவில், கோரிக் கைகள் அடங்கிய மனுவை பிஎஃப் மண்டல ஆணையரிடம் சிஐடியு மாவட்டச் செயலா ளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் பென்சனர் சங்க நிர்வாகிகள் வழங்கினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram