குறைந்தபட்ச ஊதியம் குறித்து சட்டமன்றத்தில் பேச அ.கிருஷ்ணசாமியிடம் ஓய்வூதியர்கள் மனு
21 Jan 2026, 3:58 pm
<p><strong>குறைந்தபட்ச ஊதியம் குறித்து சட்டமன்றத்தில் பேச அ.கிருஷ்ணசாமியிடம் ஓய்வூதியர்கள் மனு</strong></p>
<p>திருவள்ளூர், ஜன 21- சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியில் ஓய்வு பெற்றோருக்கு குறைந்த பட்ச ஓய்வூதியமாக ரூ.7,850 வழங்க வேண்டும் என்ற கோரிக்கையினை வரும் சட்டமன்ற கூட்டத் தொடரில் தமிழ்நாடு அரசை வலியுறுத்த வேண்டும் என ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் செவ்வா யன்று (ஜன.20), பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமியிடம் மனு அளித்தனர். திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ண சாமியை செவ்வாயன்று (ஜன 20), பட்டா பிராமில் உள்ள அவரது இல்லத்தில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூ தியர் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் ஆர்.ஜெயராமன், பொருளாளர் கு.கன்னியப்பன், திருநின்றவூர் கிளை தலைவர் எம்.நாகராஜ், செயலாளர் ஜி.புருஷோத்தமன் ஆகியோர் நேரில் சந்தித்து மனுவை அளித்தனர். இந்த கோரிக்கையானது அவர்களது நீண்ட கால கோரிக்கை என்பதையும். இந்த கோரிக்கை 2021ஆம் ஆண்டு அறிக்கை யில் திமுக தேர்தல் அறிக்கையிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சந்திப்பின்போது தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜி.சம்பத் உடனிருந்தார்.</p>
