ஓய்வூதியர் அமைப்பு தினம் கொண்டாட்டம்
3 Feb 2026, 4:00 pm
<p><strong>ஓய்வூதியர் அமைப்பு தினம் கொண்டாட்டம்</strong></p>
<p>கோவை, பிப்.3- உள்ள தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க அமைப்பு தினம் கோவையில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் 14 ஆவது அமைப்பு தினம் செவ்வா யன்று தாமஸ் கிளப்பில் உள்ள தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க அலுவலகம் முன்பு கொடியேற்றத்து டன் துவங்கியது. இந்நிகழ்விற்கு சங்க மாவட்டத் தலைவர் எஸ்.மதன் தலைமை வகித்தார். இணைச்செயலாளர் எம்.ஏசை யன் வரவேற்றார். மாநில துணைத் தலைவர் என்.அரங்கநாதன் சங்க கொடியினை ஏற்றி வைத்து உரையாற்றினார். இதில், மாவட்டச் செயலாளர் கே.அருணகிரி எதிர்கால நடவ டிக்கைகள் குறித்து விளக்க உரையாற்றி னார். ஏராளமான ஓய்வூதியர்கள் பங்கேற்ற இந்நிகழ்வில், தெற்கு மாவட்ட கிளை தலைவர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.</p>
