தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஓய்வில்லா போராட்டக் களத்தில் ஓய்வூதியர்கள்! - ஆர். ராஜசேகர்

27 Feb 2026, 5:32 pm
ஓய்வில்லா போராட்டக் களத்தில் ஓய்வூதியர்கள்!  - ஆர். ராஜசேகர்
<p><strong>ஓய்வில்லா போராட்டக் களத்தில் ஓய்வூதியர்கள்!</strong></p> <p>சொந்த மண்ணில் உழைத்து ஓய்வுபெற்ற முதியவர்கள், தங்கள் அந்திமக் காலத்தில் கௌரவமான வாழ்க்கை வாழ ஓய்வூதியம் என்பது அடிப்படை ஆதாரமாகும். ஆனால், இன்று ஒன்றிய அரசின் அடாவடிப் போக்கினால், ஓய்வூதியர்கள் வீதிக்கு வந்து போராடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. ஒன்றிய அரசு, ரயில்வே, அஞ்சல், ஆர்எம்எஸ் (RMS) மற்றும் பிஎஸ்என்எல் (BSNL) உள்ளிட்ட பல்வேறு பொதுத்துறை ஓய்வூதியர்கள் ஒன்றி ணைந்து, தங்களின் நியாயமான உரிமை களுக்காகத் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். முதன்மையான கோரிக்கைகளும் போராட்டங்களும் ஒன்றிய அரசே, &lsquo;பென்ஷன் வேலிடேஷன் சட்டம் - 2025&rsquo;-ஐ ரத்து செய்; எட்டாவது ஊதியக் குழுவின் பணிக் குறிப்பாணையில் ஓய்வூதியத் திருத்தத்தை இணைத்திடு; பங்களிப்பு இல்லா ஓய்வூதியத்தின் &lsquo;நிதிச் செலவு&rsquo; என்ற வார்த்தையை நீக்கு; பிஎஸ்என்எல் ஓய்வூதியர்களுக்கு 1.1.2017 முதல் ஓய்வூதிய மாற்றத்தை உடனே வழங்கு போன்ற கோரிக்கைகளை முன்வைத்து நாடு தழு விய அளவில் போராட்டங்கள் தீவிரமாக நடை பெற்று வருகின்றன. ஆர்ப்பாட்டங்கள், தர்ணாக்கள், மனிதச் சங்கிலிகள், நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் மகஜர் அளிப்பது, கருத்தரங்கங்கள் மற்றும் தில்லி பேரணி என ஓய்வூதியர்கள் தங்களின் குமுறலைப் பதிவு செய்து வருகின்றனர். பென்ஷன் வேலிடேஷன் சட்டம் &ndash; 2025: ஒரு கருப்புச் சட்டம் ஓய்வூதியர்களைப் பெரிதும் அச்சுறுத்துவது 2025 மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட &lsquo;பென்ஷன் வேலிடேஷன் சட்டம்&rsquo; ஆகும். நிதி மசோதாவோடு இணைத்து, விவாதமே இன்றி அவசர அவசர மாக நிறைவேற்றப்பட்ட இச்சட்டம், 53 ஆண்டு களுக்கு முன்பிருந்து, அதாவது 1.6.1972 முதல் முன் தேதியிட்டு நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு ஊழியர்களுக்கான சிசிஎஸ் ஓய்வூதிய விதிகள் (CCS Pension Rules 1972) அமலான அதே தேதியிலிருந்து இச்சட்டத்தைக் கொண்டு வரு வது வஞ்சகமான செயலாகும். நீதிமன்றத் தீர்ப்புகளைப் புறந்தள்ளிச் செயல்படும் அதிகாரத்தை ஒன்றிய அரசுக்கு இச்சட்டம் வழங்குகிறது. கடந்த 43 ஆண்டுகளாக ஓய்வூதியர்களால் போற்றப்படும் &lsquo;டி.எஸ். நகரா&rsquo; வழக்கின் வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பையே இச்சட்டம் கேள்விக்குறியாக்கியுள்ளது. ஓய்வூதி யம் என்பது அரசின் &lsquo;வெகுமதி&rsquo; அல்ல; அது ஊழி யர்களின் &lsquo;கொடுபடா ஊதியம்&rsquo; என்கிற தார்மீக உரிமையைச் சிதைப்பதோடு, ஓய்வூதியம் கொடுப்பதில் பாரபட்சம் காட்டுவது அரசியல் சாசன விதிகள் 14 மற்றும் 16-க்கு முரணானது என்பதையும் இச்சட்டம் புறந்தள்ளுகிறது. எட்டாவது ஊதியக் குழுவின் ஏமாற்று வேலை 2025 நவம்பரில் அமைக்கப்பட்ட எட்டாவது ஊதியக் குழுவின் பணி ஆணையில், ஓய்வூதியத் திருத்தம் பற்றிய எந்தக் குறிப்பும் இல்லாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நான்காவது ஊதியக் குழு முதல் ஏழாவது ஊதியக் குழு வரை நடைமுறையில் இருந்த ஓய்வூதியப் பரிசீலனை, தற்போது திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டுள்ளது. &ldquo;கால் காசு ஊதியம் என்றாலும் கவர்மெண்ட் உத்தியோகம்&rdquo; என்ற சொற்றொடரே ஓய்வூதியப் பாதுகாப்பைக் கருதி &nbsp;உருவானதுதான். பழைய ஓய்வூதியத் திட்டத்தில் (OPS) ஊழியர்கள் உழைப்பிற்கு ஏற்ப வழங்கப்பட வேண்டிய ஊதியத்தின் ஒரு பகுதியைச் சேமித்துத்தான் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. எனவே, இதுவும் பங்களிப்பு ஓய்வூதியமே என்பது நிதர்சனம். இந்திய முதியோர்களின் &nbsp;அவல நிலை கடந்த 1.1.2017 முதல் வழங்கப்பட வேண்டிய ஓய்வூதிய மாற்றம் இன்றி, சுமார் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் அல்லல்பட்டு வருகின்றனர். தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS), ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS) எனப் பல்வேறு பெயர்களில் அரசு ஏமாற்றி வருகிறது. இந்தியாவில் 60 வயதைக் கடந்த 14 கோடி பேரில், சுமார் 12 சதவீதமான வர்கள் மட்டும்தான் கௌரவமான ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். சர்வதேச ஓய்வூதியக் குறியீட்டின் பட்டியலில் உள்ள 47 நாடுகளில் இந்தியா 45-ஆவது இடத்தில் பின்தங்கியுள்ளது வருந்தத்தக்கது. அரசின் இத்தகைய அடாவடிக் கொள்கை களை எதிர்த்து, &lsquo;சிவில் ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு&rsquo; (FCPA) &ldquo;வயது என்பது வெறும் எண்கள் தான்... வீரமோ நெஞ்சில்... வாழ்ந்த &nbsp;அனுபவ ஆயுதம் கையில்!&rdquo; என்ற முழக்கத்தோடு, &nbsp;பென்ஷன் வேலிடேஷன் சட்டம் திரும்பப் பெறப்படும் வரை ஓய்வூதியர்களின் அறப்போர் தொடர்கிறது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.