ஓய்வூதியர் தின விழா; சிறப்பு கருத்தரங்கம்
21 Dec 2025, 3:21 pm
<p><strong>ஓய்வூதியர் தின விழா; சிறப்பு கருத்தரங்கம்</strong></p>
<p>கோவை, டிச.21- தருமபுரி மற்றும் கோவையில் ஓய்வூதியர் தின விழா மற்றும் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற் றது. மத்திய, மாநில அரசு பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில், ஓய்வூதியர் தின சிறப் புக் கருத்தரங்கம் ஞாயிறன்று கோவை டாடாபாத் மின்வாரிய மன மகிழ் மன்ற அரங்கத்தில் நடைபெற் றது. இந்நிகழ்விற்கு ஒருங்கிணைப் புக்குழு மாவட்டத் தலைவர் சி.வி. மீனாட்சிசுந்தரம் தலைமை வகித் தார். மாவட்டப் பொருளாளர் ஏ.குடி யரசு வரவேற்றார். மாவட்டச் செய லாளர் என்.அரங்கநாதன் துவக்க வுரையாற்றினார். தென்னக ரயில்வே ஓய்வூதியர் சங்க மாநிலத் தலைவர் ஆர்.இளங்கோவன், ‘ஓய்வூதியர் தினத்தின் முக் கியத்துவம்; ஓய்வூதியர்களின் தற் போதைய பிரச்சனைகள்; அதற்கு ரிய தீர்வுகள்’ குறித்து கருத்துரை யாற்றினார். இதில் மாவட்ட நிர்வாகி கள் என்.சின்னசாமி, எஸ்.கருணா நிதி, எஸ்.மதன், என். அருணகிரிநா தன், பி.விவேகானந்தன், டி.சுப்பிர மணியன், டி.எல்.வெங்கட்ராமன் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மூத்த ஓய்வூ தியர்கள் கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்வில் இலவச கண் பரிசோ தனை முகாம் நடைபெற்றது.நிறை வாக, டி.சிவராசு நன்றி கூறினார். தருமபுரி தருமபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பள்ளியில் நடைபெற்ற ஓய்வூதியர் தின விழாவிற்கு, மத்திய மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய் வூதியர் அமைப்புகளின் ஒருங் கிணைப்புக்குழு மாவட்டச் செயலா ளர் பி.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் பி. ரவி, போக்குவரத்து ஓய்வூதியர் நல அமைப்பின் மாநில இணைச் செயலாளர் கே.குப்புசாமி, அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.பழனி சாமி, செயலாளர் எம்.பெருமாள், மின்வாரிய ஓய்வூதியர் நல அமைப்பின் மாவட்டத் தலைவர் ஆர்.சுந்தரமூர்த்தி, இன்சூரன்ஸ் ஓய்வூதியர் சங்க தலைவர் ஏ. சோமசுந்தரம், அஞ்சல் துறை ஓய்வூ தியர் சங்க மாவட்டத் தலைவர் வி. முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இவ்விழாவில், 70 வயதை கடந்த ஓய்வூதியர்களுக்கு பயனாடை அணிவித்து கெளரவித் தனர்.</p>
