ஓய்வூதியர் கூட்டமைப்பு தர்ணா
10 Jan 2026, 2:48 pm
<p><strong>ஓய்வூதியர் கூட்டமைப்பு தர்ணா</strong></p>
<p>நாமக்கல், ஜன.10- ஓய்வூதிய திருத்த சட்ட மசோதாவை திரும்பப் பெறக் கோரி சிவில் ஓய்வூதிய அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் நாமக்கல் பூங்கா சாலையில் தர்ணா நடைபெற்றது. ஓய்வூதிய திருத்த சட்ட மசோதாவை திரும்பப் பெற வேண்டும். எட்டாவது ஊதிய குழுவின் பலன்களை 1.1.2026 முதல் அனைத்து ஓய்வூதியர்களுக்கும் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிவில் ஓய்வூதியர் கூட்டமைப்பு சார்பில், வெள்ளியன்று நாமக்கல் பூங்கா சாலையில் தர்ணா நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு சங்க மாவட்டத் தலைவர் அழகிரிசாமி தலைமை வகித்தார். இணை செயலாளர் ராமசாமி வரவேற்றார். கன்வீ னர் பி.கே.ராமசாமி கோரிக்கைகளை வலியுறுத்தி விளக் கிப் பேசினார். சங்க நிர்வாகிகள் கருப்பண்ணன், காளி யப்பன், குப்புசாமி, மணியரசன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். சங்க மாவட்டச் செயலாளர் இளங்கோவன் நிறைவுறையாற்றினார். துணைத் தலைவர் ஜெயமணி நிறைவாக நன்றி கூறினார். இதில் நூற்றுக்கும் மேற் பட்டோர் கலந்து கொண்டனர்.</p>
