ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
15 Nov 2025, 4:09 pm
<p><strong>ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>ஈரோடு, நவ.15- மத்திய அரசு ஊழியர் ஒருங்கிணைப்புக்குழு, ஓய்வூ தியர் அமைப்புகளின் தேசிய ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் ஈரோடு தலைமை அஞ்சலக வளாகத் தில் அண்மையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 8ஆவது ஊதியக்குழுவின் ஊழியர் மற்றும் ஓய்வூ தியர் விரோத விதிமுறைகளை திரும்பப் பெற வலியு றுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய அரசு ஊழி யர் ஒருங்கிணைப்புக்குழு செயலாளர் என்.ராமசாமி தலைமை வகித்தார். என்எப்பிஇ பி3 செயலாளர் கே. கோபிநாத், தேசிய ஒருங்கிணைப்புக்குழுவின் மாவட் டச் செயலாளர் பி.சின்னசாமி ஆகியோர் கருத்துரை யாற்றினர். திரளானோர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத் தின் நிறைவாக அகில இந்திய பிஎஸ்என்எல் டிஓடி ஓய்வூ தியர் சங்க மாவட்டச் செயலாளர் வி.மணியன் நன்றி கூறி னார்.</p>
<p> </p>
