தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஓய்வூதியர் கூட்டமைப்பின் மண்டலக் கருத்தரங்கம்

3 Feb 2026, 4:00 pm
ஓய்வூதியர் கூட்டமைப்பின் மண்டலக் கருத்தரங்கம்
<p><strong>ஓய்வூதியர் கூட்டமைப்பின் மண்டலக் கருத்தரங்கம்</strong></p> <p>ஈரோடு, பிப்.3- தொழிலாளர்கள் மற்றும் விவ சாயிகள் இணைந்து பிப்.12 ஆம் தேதியன்று நடத்தவுள்ள தேசம் காக்கும் வேலைநிறுத்தத்திற்கு ஓய்வூதியர் அமைப்புகளின் கூட்ட மைப்பின் சார்பில் நடைபெற்ற மண்டலக் கருத்தரங்கம் தனது முழு &nbsp;ஆதரவை தெரிவித்துக் கொள்கி றது என தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன. ஓய்வூதியர் அமைப்புகளின் கூட்டமைப்பின் சார்பில் ஈரோடு &nbsp;ஏ.எம் மஹாலில் மண்டல கருத் தரங்கம் செவ்வாயன்று நடைபெற் றது. இக்கருத்தரங்கிற்கு என்சிசி பிஏ ஆர்.முருகேசன், ஏஐபி எஸ்என்எல் பிடபிள்யுஏ கே.சுப்ப ராயன், பி.வேணுகோபால் மற்றும் சிபிஎஸ்சி என்.அரங்கநாதன் ஆகி யோர் தலைமை வகித்தனர். என்சிசி பிஏ மாவட்டச் செயலாளர் பி.சின்ன சாமி வரவேற்றார். தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப் பின் மேனாள் பொது செயலாளர் &nbsp;கே.சுவாமிநாதன் சிறப்புரையாற்றி னார். சிஐடியு மாவட்டச் செயலா ளர் கே.மாரப்பன், ஏஐடியுசி மாநிலச் செயலாளர் எஸ்.சின்னசாமி ஆகி யோர் வாழ்த்திப் பேசினர். &nbsp;இக்கருத்தரங்கில், 25.03.2025 &nbsp;அன்று ஒன்றிய அரசு பென்சன் &nbsp;திருத்தச் சட்டத்தை நாடளுமன்றத் தில் அறிமுகப்படுத்தி நிறைவேற்றி யுள்ளது. இந்தச் சட்டத்தின்படி &nbsp;1.6.1972 முதல் தற்போது வரையி லும் மற்றும் எதிர்காலத்திலும் ஓய்வூதியர்களை அவர்களது பணி &nbsp;நிறைவு தேதியின் அடிப்படையில் வேறுபடுத்தி ஓய்வூதியம் நிர்ண யிக்கும் உரிமையை அரசு பெறு கிறது. இந்த சட்டத்திருத்தம் அரசி யல் அமைப்புச்சட்ட வீதி 14 மற்றும் &nbsp;DS நகரா வழக்கில் உச்ச நீதி மன்றம் &nbsp;7:12:1983 வழங்கிய வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு ஆகிய வற்றுக்கு எதிரானதாகும். இந்த &nbsp;சட்டத் திருத்தத்தின்படி, வருங் காலத்தில் ஊதியக்குழு பரிந்துரை களை அமுலாக்கும் தேதியில், பணி &nbsp;நிறைவு செய்த ஓய்வூதியர்களது ஓய்வூதியத்தை எந்த தேதியிலி ருந்து மாற்றியமைப்பது என்பது பற்றி முடிவு செய்ய அரசு அதிகா ரம் பெறுகிறது. இந்தச் சட்டத்திருத்தத்தின் கார ணமாக சுமார் ஒரு கோடி ஒன்றிய &nbsp;அரசு ஓய்வூதியர்களின் உரிமை களை நேரடியாக பாதிப்ப தோடு, மாநிலங்கள் மற்றும் &nbsp;பொதுத்துறைகளில் உள்ள மற் றொரு கோடி ஓய்வூதியர்களையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. உச்ச நீதி மன்றம் மற்றும் அர சமைப்பு சட்டம் வழங்கியுள்ள உரி மைகளைத் தன்னகத்தே எடுத்துக் &nbsp;கொண்டுள்ள இந்தச் சட்டத்திருத் தத்தை உடனடியாக திரும்பப் பெற &nbsp;வேண்டும். 8 ஆவது ஊதியக் குழுவின் பரிந் துரை வரம்பில் ஓய்வூதியம் மறு நிர் ணயம் என்ற வார்த்தையே இல்லை. மேலும், நாம் இப்போது &nbsp;பெற்றுக் கொண்டுள்ள உறுதிப்ப டுத்தப்பட்ட பென்சனுக்கு ஆகும் &nbsp;செலவை பரிசீலனை செய்ய &nbsp;ஊதியக் குழுவை அரசு பணித் துள்ளது. ஓய்வூதியர்களுக்கு விரோ தமான இந்த அம்சத்தைத் திரும் பப் பெற வேண்டும். பரிந்துரை வரம்பில் ஓய்வூதிய மாற்றத்தைச் சேர்த்திட வேண்டும். ஊதியக் குழு வின் பரிந்துரைகளை 1.1.2026 முதல் &nbsp;அமுலாக்க வேண்டும். மேலும், நான்கு தொழிலாளர் தொகுப்பு சட்டங்களை திரும்ப பெற வேண்டும். காப்பீட்டுத் துறை யில் 100% அந்நிய முதலீட்டை அனு மதிக்க கூடாது. அணு சக்தித்துறை யில் தனியார் மயத்தை கைவிட வேண்டும். விதை சட்டமசோதா 2025, மின்சரா சட்ட மசோதா 2025, &nbsp;ஓய்வூதிய சட்டத் திருத்தம் 2025 &nbsp;ஆகியவற்றை திரும்ப பெற வேண் டும். ஊழியர் பங்களிப்பில்லாத, பழைய உறுதிப்படுத்தப்பட்ட ஓய் வூதிய திட்டத்தை மீண்டும் அமு லாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தொழிலாளர்கள் மற்றும் விவசாயி கள் இணைந்து பிப்.12 ஆம் தேதி யன்று நடத்தவுள்ள தேசம் காக்கும் &nbsp;வேலைநிறுத்தத்திற்கு இக்கருத்த ரங்கம் தனது முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது &nbsp;என தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன. முன்னதாக ஏஐபிடிபிஏ அகில இந்திய அமைப்பு செயலர் என்.குப்புசாமி தீர்மானங்களை முன் மொழிந்தார். ஏஐபிஆர்பிஏ கோட்ட செயலாளர் என்.ராமசாமி, &nbsp;என்சிசிபிஏ டி.பாஸ்கரன் ஆகியோர் &nbsp;வழிமொழிந்தனர். இறுதியாக டிஆர்பியு சேலம் கோட்ட செயலா ளர் சி.முருகேசன் நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.