சென்னையில் ஓய்வூதியர் தின விழா கொண்டாட்டம்
17 Dec 2025, 4:11 pm
<p><strong>சென்னையில் ஓய்வூதியர் தின விழா கொண்டாட்டம்</strong></p>
<p>சென்னை, டிச.17- ஓய்வூதியர் தினமான புதனன்று (டிச.17) சிந்தாதிரிப்பேட்டையில் தமிழ்நாடு அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சென்னை மாவட்டம் சார்பில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டமைப்பின் சென்னை மாவட்டத்தலைவர் பி. ஏபெல் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் செயலாளர் என்.கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாநில பொதுச்செயலாளர் கி.இளமாறன் கூட்டத்தை துவக்கி வைத்தார். தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மாநிலச் செயலாளர் டி.கே.சம்பத்ராவ், அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் சென்னை மாவட்ட தலைவர் பி.எஸ்.அப்பர், தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு கவுரவத் தலைவர் எம்.சந்திரன், சென்னை மாவட்டத் தலைவர் டி.குருசாமி, சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரிய ஓய்வு பெற்றோர் நலச்சங்க தலைவர் என்.பரமசந்திரன், ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச்சங்கம் மாவட்ட பொருளாளர் கு.பூபாலன் உள்ளிட்டோர் கருத்துறையாற்றினார். மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் எஸ். எஸ்.சுப்பிரமணியன் நிறைவுரையற்றினர். கூட்டமைப்பின் நிதி பொறுப்பாளர் எஸ்.ஆதிமூலம் நன்றி கூறினார்.</p>
