ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா…
10 Feb 2026, 4:50 pm

ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா…

சத்துணவு, அங்கன்வாடியில் பணி ஓய்வு பெற்ற ஊழியருக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும், 70 வயது பூர்த்தியடைந்த ஓய்வூதியருக்கு 10 விழுக்காடு ஓய்வூதியம் உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாயன்று (பிப்.10), திருவள்ளூரில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஜி.இளங்கோவன் தலைமையில் மாவட்ட செயலாளர் ஆர்.ஜெயராமன், பொருளாளர் கே.கன்னியப்பன், துணை நிர்வாகிகள் ஆர்.இராமமூர்த்தி, டி.எம்.தியாகராஜன், து.மகேந்திரன், முன்னாள் மாநில செயலாளர், ரவீந்தரன், ஓய்வூதியர் கூட்டமைப்பின் பொருளாளர் கே.குப்பன் ஆகியோர் பேசினர். தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாநில செயலாளர் ம.நாதன் போராட்டத்தை நிறைவு செய்து பேசினார்.

ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு செவ்வாயன்று (பிப்.10) அனைத்து சங்க ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் என். சுந்தரேசன் தலைமையில் நடைபெற்ற தர்ணா போராட்டத்தில் மாநில செயலாளர் பி. ரவி துவக்க சிறப்புரையாற்றினார். மாவட்ட செயலாளர் என். ஜெயக்குமார், நிர்வாகிகள் டி. ராஜசேகரன், கே. தேவராஜ், கே. வாசுதேவன், ஜெ. சந்திரசேகரன், ஏ. லியோபால் நிர்மல்குமார், ஏ. அப்துல் ரஹீம் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் நடைபெற்ற தர்ணாவில் மாவட்ட தலைவர் எம்.பன்னீர்செல்வம் தலைமை தாங்க, செயலாளர் பி.குமரேசன்,பொருளாளர் பி.ஞானசேகரன் கோரிக்கை களை விளக்கி பேசினர். தமிழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச்சங்க மாவட்ட தலைவர் செ.நா.ஜனார்த்தனன், பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்க மாநிலத்தலைவர் சி.ஞானசேகரன், ஓய்வூதியர் சங்க ஒருங்கிணைப்பு குழுவின் மாவட்ட செயலாளர் பி.லோகநாதன், அஞ்சல் ஆர்எம்எஸ் ஓய்வூதியர் சங்க மாநில பொருளாளர் எ.கதிர்அகமது வாழ்த்தி பேசினர். நிறைவாக மாநில செயலாளர் பா.ரவி சிறப்புரையாற்றினார். முடிவில் மாவட்ட இணை செயலாளர் ஜெயசந்திர பாக்கியராஜ் நன்றி கூறினார்.இந்த போராட்டத்தில் 200க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் பங்கேற்றனர்.