மார்க்சிஸ்ட் கட்சிக்கு வளர்ச்சி நிதி வழங்கிய ஓய்வூதியர்
4 Apr 2026, 4:02 pm
<p><strong>மார்க்சிஸ்ட் கட்சிக்கு வளர்ச்சி நிதி வழங்கிய ஓய்வூதியர்</strong></p>
<p>புதுக்கோட்டை, ஏப். 4- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகியாகவும், தமிழ்நாடு கால்நடைத் துறையில் பணியாற்றியவருமான கே. குமரேசன் சமீபத்தில் பணி ஓய்வு பெற்றார். இதனைத் தொடர்ந்து, பணி ஓய்வுபெற்ற நிதியில் இருந்து ரூ.25 ஆயிரத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சி நிதியாக, மாநில செயற்குழு உறுப்பினர் கே. அர்ஜூனனிடம் வழங்கினார். மாவட்டச் செயலாளர் எஸ். சங்கர், மாவட்டக் குழு உறுப்பினர் அ. மணவாளன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.</p>
