தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கூட்டுறவுத்துறை அதிகாரிகளின் அலைகழிப்பால் தற்கொலை முடிவை நோக்கி தள்ளப்பட்ட ஓய்வூதியதாரர்

2 Mar 2026, 3:30 pm
கூட்டுறவுத்துறை அதிகாரிகளின் அலைகழிப்பால் தற்கொலை முடிவை நோக்கி தள்ளப்பட்ட ஓய்வூதியதாரர்
<p><strong>கூட்டுறவுத்துறை அதிகாரிகளின் அலைகழிப்பால் தற்கொலை முடிவை நோக்கி தள்ளப்பட்ட ஓய்வூதியதாரர்</strong></p> <p>ராணிப்பேட்டை, மார்ச் 2- 36 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு நிறுவனத்திற்காக உழைத்த தொழி லாளிக்கு, ஓய்வு காலத்தில் கிடைக்க வேண்டிய பணப்பலன்களை வழங்கா மல் அலைக்கழித்த சம்பவம் ராணிப்பேட்டை யில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆற்காடு தோப்புக்கான அடுத்த சத்யா நகரில் இயங்கி வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் (எண்: 137), துணை மேலாளராக 36 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவர் கீழ்விசாரம் பகுதியைச் சேர்ந்த ஜோதிநாதன் (62). கடந்த 2025 மார்ச் மாதம் பணியிலிருந்து ஓய்வு பெற்ற இவருக்கு, சட்டப்படி கிடைக்க வேண்டிய ₹5 லட்சம் செட்டில்மென்ட் தொகை ஓராண்டாகியும் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. தனது வாழ்நாள் சேமிப்பைக் கேட்டு வங்கி நிர்வாகத்தை அணுகிய ஜோதி நாதனை, அதிகாரிகள் முறையான பதில ளிக்காமல் இழுத்தடிப்பு செய்துள்ளனர். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அதி காரிகள், முதியவர் என்றும் பாராமல் அவரை ஒருமையில் பேசி, &quot;உன்னால் முடிந்ததைப் பார்த்துக்கொள்&quot; என மனி தாபிமானமற்ற முறையில் மிரட்டியதாகத் தெரிகிறது. பணம் கிடைக்காதது ஒருபுறம் இருக்க, அதிகாரிகளின் இந்த மோச மான அணுகுமுறையால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான ஜோதிநாதன், வங்கி வாசலிலேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது கண்ணீருடன் அவர் கூறியதாவது, &quot;36 ஆண்டுகள் விசுவாசமாக உழைத்த எனக்குக் கிடைத்த பரிசு இந்தத் தர்ணா போராட்டமா? அதிகாரிகள் தொடர்ந்து என்னை அலைக்கழித்தால், கடிதம் எழுதி வைத்துவிட்டுத் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை.&quot; இந்த விவகாரம் பூதாகரமானதைத் தொடர்ந்து, முதற்கட்டமாக அவரது இறுதிப் பணப்பலன்களுக்கான காசோலையை அதிகாரிகள் அவரிடம் வழங்கினர். இருப்பினும், ஒரு முதிய வரைத் தற்கொலை விளிம்பு வரை கொண்டு சென்ற அதிகாரிகளின் போக்கு அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.