முந்தய பக்கம்

திருப்பத்தூரில் ஓய்வூதியர் தின விழா

17 Dec 2025, 4:11 pm
திருப்பத்தூரில் ஓய்வூதியர் தின விழா
<p><strong>திருப்பத்தூரில் ஓய்வூதியர் தின விழா</strong></p> <p>திருப்பத்தூர், டிச.17- திருப்பத்தூரில் &nbsp;தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஓய்வூதியர் தின விழா மாவட்ட தலைவர் ராசு தலைமையில் நடைபெற்றது. சங்கத்தின் துணை தலைவர்கள் ஜவகர்லால் நேரு, வேலு, முத்துலட்சுமி, கோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக மாநில துணை தலைவர் குப்பன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். இதில் திமுக அரசு தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும் இந்த விழாவில் சிபிஎம் தாலுகா செயலாளர் காமராஜ், சிஐடியு ஒருங்கிணைப்பாளர் கேசவன், முன்னாள் மாவட்ட தலைவர் நேரு, நிர்வாகிகள் ரவி, செல்வம், ரங்கன், காசி உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட இணை செயலாளர் இளங்கோவன் நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram