தேனியில் ஓய்வூதியர் தினம்
28 Dec 2025, 5:05 pm
<p><strong>தேனியில் ஓய்வூதியர் தினம்</strong></p>
<p>தேனி, டிச.28- தமிழ்நாடு அரசு ஓய்வூதி யர் சங்கங்களின் கூட்ட மைப்பு சார்பில் தேனியில் ஓய்வூதியர் தினம் அனுஷ் டிக்கப்பட்டது. தேனியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அமைப்பின் தேனி மாவட்டத் தலைவர் ஏ.பி.முருகேசன் தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.அரங்கசாமி, மின் வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மாநில துணைத் தலைவர் கே.சந்திரசேகரன், அனைத்து துறை ஓய்வூதி யர் சங்க மாவட்டச் செய லாளர் சிவமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மின் வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மாவட்டச் செய லாளர் வி.பெருமாள்சாமி வர வேற்றார். நிகழ்ச்சியை மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மாநில துணைப் பொதுச் செயலாளர் வி. பிச்சைராஜன் தொடங்கி வைத்தார். விழாவில் மறை ந்த ஓய்வூதியர் கூட்டமைப்பு தலைவர் சி.பா.ஆண்டவர் உருவப்படத்தை மூத்த தலைவர் சலீம் திறந்து வைத்தார். பள்ளி, கல்லூரி ஆசிரியர் சங்க மாநில செய லாளர் பெ.பாலுசாமி, அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் தேனி மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் ஜி.ராஜேந்தி ரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசி ரியர் சங்க பொதுச் செயலா ளர் ந.பர்வதராஜன் சிறப் புரை ஆற்றினார். தமிழ்நாடு அரசு அனை த்து துறை ஓய்வூதியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் பா.ராமமூர்த்தி நிறைவுரையாற்றினார். கூட் டமைப்பு மாவட்ட பொருளா ளர் வி.எஸ்.நாகராஜன் நன்றி கூறினார்.</p>
