இரு வாரங்களில் ஓய்வூதிய அரசாணை
8 Jan 2026, 2:44 pm
<p><strong>இரு வாரங்களில் ஓய்வூதிய அரசாணை</strong></p>
<p>மதுரை, ஜன. 8 - தமிழ்நாடு அரசின் உறுதி யளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கான அரசாணை இரு வாரங்களில் வெளி யிடப்படும் என அரசு தெரி வித்துள்ளது. புதிய ஓய்வூதி யத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரி தொடரப்பட்ட வழக்கில், உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விளக்கம் அளிக்கப்பட்டது. </p>
