அடிப்படை வசதியின்றி அவதிப்படும் சமத்துவபுரம் மக்கள்!
4 Jun 2026, 10:25 pm

தருமபுரி, ஜூன் 4-

பென்னாகரம் பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் வசிக்கும் பொதுமக்கள் குடிநீர், கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு பெரியார் நினைவு சமத்துவபுரம் அமைக்கப்பட்டது. நூறு குடியிருப்புகள் உள்ள நிலையில், இங்கு வசிக்கும் மக்கள் அடிப்படை வசதியின்றி அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, பருவதன அள்ளி ஊராட்சியிலிருந்து ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் விடப்படுகிறது. இது வெளிப்புற பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தப்படுகிறது. மேலும், ஊராட்சி ஒன்றிய 15 ஆவது நிதிக்குழு மானிய திட்டம் 2020 ஆம் ஆண்டில்

ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது இதுவும் பழுதடைந்துவிட்டது. ஒகேனக்கல் குடிநீரும் வருவதில்லை. மேலும், கழிவுநீர் கால்வாய்களை சுத்தம் செய்யாமல் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் வெளியில் செல்லாமல் தேங்கும் நிலை உள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மின்கம்பங்கள் அமைக்கப்

பட்டும், மின்விளக்குகள் இரவு நேரங்களில் எரிவதில்லை. இதனால் இருளில் மூழ்கிய இப்பகுதியில், விஷ உயிரினங்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

இங்குள்ள இளைஞர்கள்பயன்பெறும் வகையில் உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டது. ஆனால், தற்போது பயன்படுத்த முடியாத நிலையில் பழுதடைந்துள்ளன. மேலும், உடற்பயிற்சிக்கான பொருட்கள் திருடுபோயுள்ளன. குழந்தைகளின் பொழுதுபோக்கிற்காக அம்மா சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டு, தற்போது பராமரிப்பின்றி உள்ளது. தற்போது பெரியார் நினைவு சமத்துவபுரமானது மக்கள் பயன்பாட்டிற்கு தேவையான வசதிகளின்றி உள்ளது. எனவே ஒகேனக்கல் குடிநீர், தெருவிளக்குகள், கழிவுநீர் கால்வாய் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உடனே செய்து கொடுக்க வேண்டும். பழுதடைந்துள்ள உடற்பயிற்சி கூடம், சிறுவர்

பூங்காவை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

- ஜி.லெனின் -