கால்வாய் ஆக்கிரமிப்பால், குடியிருப்புக்குள் புகுந்த வெள்ளநீர்!
26 May 2026, 11:43 pm

கால்வாய் ஆக்கிரமிப்பால், குடியிருப்புக்குள் புகுந்த வெள்ளநீர்!

தருமபுரி, மே 26- பென்னாகரம் பகுதிகளில் பெய்த தொடர் கனமழையால் ஏரி நிரம்பி, உபரிநீர் வெளியேறும் கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்ட தால், அருகிலுள்ள குடியிருப்புக ளுக்குள் கழிவுநீருடன், வெள்ளநீர் புகுந்தது.

தருமபுரி மாவட்டம், பென்னா கரத்தின் மையப் பகுதியில் எட்டரை ஏக்கரில் தேசியநாயக்கன் ஏரி உள் ளது.

நகர் பகுதியில் புதை சாக்கடை வசதி இல்லாததால், குடியிருப்புக ளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் இந்த ஏரியில் தேங்கிவந்தது.

கடந்த 2022 – 2023 ஆம் ஆண்டில் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. .79 கோடியில் ஏரியை தூர் வாரி, கரையை பலப்படுத்தி நடை பாதை அமைப்பதற்கான ஒப்பந்தம் தனியாருக்கு விடப்பட்டது.

ஏரியில் உள்ள கழிவுநீரை வெளியேற்றும் போது, கால்வாய் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது தெரியவந் தது.

மாவட்ட அளவிலான அதிகாரி கள் ஆய்வு மேற்கொண்டபோது, ஆக்கிரமிப்பால் கழிவுநீர் அகற்ற முடியாத நிலை ஏற்பட்டது.

பின்னர், பணி தாமதமானதால் நிதி ஒதுக் கீட்டை மாவட்ட நிர்வாகம் திரும்பப் பெற்றது.

கடந்த சில நாட்களாக பென்னா கரம் பகுதியில் தொடர் கனமழை பெய்து வந்ததால், தேசியநாயக் கன் ஏரி முழுவதுமாக நிரம்பியது.

கால்வாய் ஆக்கிரமிப்பால் அருகி லுள்ள வீடுகளில் கழிவுநீர் புகுந்து துர்நாற்றம் வீசிவருகிறது.

இதுகு றித்து தகவலறிந்த பென்னாகரம் பேரூராட்சி ஊழியர்கள் மின்மோட் டார் மூலம் கழிவுநீரை வாகனத் தில் எடுத்துச்செல்லும் பணியில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.

இது குறித்து பென்னாகரம் வட்டாட்சியர் ஆறுமுகத்திடம் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்ததன் அடிப்படையில், பேரூராட்சித் துறை அதிகாரிகள் தேசியநாயக் கன் ஏரி பகுதியில் ஆய்வு மேற் கொண்டு, ஏற்கனவே அமைக்கப் பட்டு பாதியில் நிறுத்தப்பட்ட கால் வாய் பணியை சீர்செய்து கழிவுநீர் வெளியேற்றும் பணியை தொடங்கி வைத்தனர்.

மேலும், ஏரியிலிருந்து வெளி யேறிய நீர் பென்னாகரம் புறவழிச் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய தால் போக்குவரத்து பாதிக்கப்பட் டது.

பென்னாகரம் நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்ட பொறியாளர் சிங்காரவேலன் தலைமையிலான நெடுஞ்சாலைத் துறையினர் பொக் லைன் வாகனத்தின் மூலம் சாலை யின் நடுவே உள்ள தடுப்புகளை அகற்றி, கோட்டை ஏரிக்கு தண் ணீர் செல்லும் வகையில் ஏற்பாடு செய்தனர்.

இதனால், பென்னாகரம் புறவழிச்சாலை, முள்ளுவாடி பகு திக்கு செல்லக்கூடிய சாலைகளில் சுமார் ஒருமணி நேரத்துக்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப் பட்டது.