தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நிலுவையில் இருக்கும் நிலம், மனைப்பட்டா பிரச்சனைகள் தாராபுரம் கோட்டாட்சியர், வட்டாட்சியரிடம் மனு அளிப்பு

13 Feb 2026, 5:58 pm
நிலுவையில் இருக்கும் நிலம், மனைப்பட்டா பிரச்சனைகள் தாராபுரம் கோட்டாட்சியர், வட்டாட்சியரிடம் மனு அளிப்பு
<p><strong>நிலுவையில் இருக்கும் நிலம், மனைப்பட்டா பிரச்சனைகள் தாராபுரம் கோட்டாட்சியர், வட்டாட்சியரிடம் மனு அளிப்பு</strong></p> <p>திருப்பூர், பிப்.13 - தாராபுரம் வட்டத்தில் பல்வேறு வகைப் பிரிவுகளில் வீட்டுமனைப் பட்டா வழங்குவது தொடர்பாக பல &nbsp;ஆண்டுகளாக நிலுவையில் இருக் கும் கோரிக்கைகளை நிறைவேற்ற &nbsp;வலியுறுத்தி தாராபுரம் கோட்டாட்சி யர் மற்றும் வட்டாட்சியரிடம் மனுக் கொடுத்து வலியுறுத்தப்பட்டது. தாராபுரம் வட்டத்தில் உள்ள கொழுமங்குளி கிராமத்தில் நில உச்ச வரம்பு சட்டத்தின் கீழ் உபரி நிலமாக &nbsp;அறிவிக்கப்பட்ட நிலம் 30 நபர்க ளுக்கு வழங்கப்பட்டது. அதற்குரிய &nbsp;நில மதிப்பு தொகை செலுத்தியும் 10 ஆண்டுகளுக்கு மேலாக நில விநியோ கம் செய்யாமல் இன்றளவும் கிடப் பில் போடப்பட்டிருப்பது குறித்தும், கொழுமங்குளி நில உரிமை பெற்ற வர்களுக்கு நிலத்தை உட்பிரிவு செய்து வழங்கக்கோரியும், தாராபுரம் &nbsp;வட்டம் வரப்பாளையம் கிராமத்தில் அரசு நிலத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வரும் குடும் பங்களுக்கு வகைமாற்றம் செய்து &nbsp;வீட்டுமனை பட்டா வழங்கப்பட வில்லை. இதுகுறித்து வருவாய்த்து றையினரிடம் கேட்டால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளது &nbsp;என தெரிவிக்கின்றனர். இதை ஏற்க &nbsp;முடியாது, அந்த ஏழை எளிய மக்களுக்கு சிறப்பு அரசாணை 480ன் படி வீட்டுமனைப் பட்டா &nbsp;வழங்க வேண்டும், நல்லாம்பாளை யத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் &nbsp;பகுதிக்கு வழங்கப்பட்ட அனுபந்த பட்டாவை பூஜ்ஜிய மதிப்பு என &nbsp;மாற்றம் செய்து அந்த மக்களை அலைக்கழிப்பதை நிறுத்த வலியு றுத்தியும், உரிய நில மதிப்புள்ள பட்டா வழங்க வேண்டும் என வலியு றுத்தியும், ஆலம்பாளையம் கிராமம் &nbsp;கரையூர் சத்யா நகரில் ஈ பட்டா &nbsp;வழங்க கேட்டும், தாராபுரம் கோட் டாட்சித் தலைவரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் &nbsp;திரளான மக்கள் கலந்து கொண்டனர். &nbsp;அத்துடன் வட்டாட்சியர் அலுவல கத்திலும் மனு அளிக்கப்பட்டது. காங்கேயம் ராதாமணி நிலத் திற்கு பிஏபி முதல் மண்டலம் பாசன &nbsp;நீர் வருவதை தடுத்து வருபவர் மீது &nbsp;அரணி வாய்கால் சட்டபடி நடிவ டிக்கை எடுக்காமல் அநீதி இழைத்து &nbsp;வரும் நிலை குறித்தும் மனு அளித்து வருவாய் கேட்டாட்சியரிடமும் பேசப்பட்டது. &nbsp;தமிழ்நாடு விவசாயிகள் சங்க &nbsp;திருப்பூர் மாவட்டத் தலைவர் எஸ். ஆர்.மதுசூதனன், தலித் விடுதலை &nbsp;இயக்கத்தின் மாநிலத் தலைவர் ச. கருப்பையா, தாராபுரம் மார்க்சிஸ்ட் கட்சியின் ஒருகிணைப்பாளர் ஆர்.வெங்கட்ராமன், மார்க்சிஸ்ட் கட்சி யின் மாவட்டக்குழு உறுப்பினர் என். கனகராஜ் ஆகியோர் கலந்து கொண் டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.