தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சிதறல் குண்டுகள்: ஊனத்தை உற்பத்தி செய்யும் அரசு வன்முறை

8 Aug 2026, 8:39 pm
சிதறல் குண்டுகள்: ஊனத்தை உற்பத்தி செய்யும் அரசு வன்முறை

சிதறல் குண்டுகள்: ஊனத்தை உற்பத்தி செய்யும் அரசு வன்முறை

ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடையின் (NPRD) பொதுச்செயலாளர் வி.முரளிதரனுடன் ஒரு உரையாடல்

தில்லியில் ஜூலை 20, 2026 அன்று போராட்டக்காரர்கள் மீது சிதறல் குண்டுத் துப்பாக்கிகள் (pellet guns) பயன்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இந்த ஆயுதத்தின் தன்மை குறித்த விவாதம் மீண்டும் முன்னுக்கு வந்துள்ளது. காஷ்மீரில் ஆயிரக்கணக்கானோரை பார்வையிழக்கச் செய்த இந்த ஆயுதம் குறித்து, மாற்றுத்திறனாளிகள் உரிமைக் கண்ணோட்டத்தில் வி.முரளிதரன் முன்வைக்கும் வாதங்கள் இங்கே:

கேள்வி: சிதறல் குண்டுகள் (பெல்லட் குண்டுகள்) மீதான உங்கள் எதிர்ப்பு, மற்ற குடிமை உரிமை அமைப்புகளின் எதிர்ப்பிலிருந்து எவ்வாறுவேறுபடுகிறது?

பதில் : பல அமைப்புகள் “அளவுக்குமீறிய பலப்பிரயோகம்” என்ற கோணத்தில் மட்டுமே இதைப் பார்க்கின்றன. ஆனால் எங்கள் கவலை வேறு. வன்முறைநடந்த அந்தத் தருணத்தோடு பிரச்சனைமுடிவதில்லை. ஒரு மனிதர் பார்வையை இழந்த பிறகு தொடங்கும் வாழ்நாள் முழுவதும் நீளும் போராட்டம்தான் —கல்வி, வேலைவாய்ப்பு, நடமாட்டம், சமூகப் பங்கேற்பு அனைத்திற்குமான போராட்டம் — எங்கள் கவனத்தின்மையம். ஒவ்வொரு காயமும் ஒரு தற்காலிக நிகழ்வல்ல; அது ஒரு நிரந்தரஊனமாக மாறுகிறது. சிதறல் குண்டுகளால் பார்வையிழந்த ஒவ்வொருவரும் அணுகக்கூடிய கல்விக்காகவும், வேலைவாய்ப்புக்காகவும், சமூக உள்ளடக்கத்திற்காகவும் இன்னொரு நீண்ட போராட்டத்தில் தள்ளப்படுகிறார்கள். எனவே இதை ஒரு உரிமைப் பிரச்சனையாகப் பார்க்க வேண்டும்;வெறும் காவல்துறை சீர்திருத்தப் பிரச்சனையாகச் சுருக்கிவிட முடியாது.

கேள்வி: சிதறல் குண்டுத் துப்பாக்கியை ஏன் தனித்துவமான அபாயம் என்கிறீர்கள்?

பதில் : ஒரு சாதாரண துப்பாக்கிக் குண்டு ஒரே இலக்கை நோக்கிச் செல்கிறது. ஆனால் ஒரு சிதறல் குண்டுக்காட்ரிட்ஜ் நூற்றுக்கணக்கான உலோகச்சிறு குண்டுகளை ஒரு பரந்த பகுதிமுழுவதும் கட்டுப்பாடின்றி வீசுகிறது. சுட்டவருக்கோ, உத்தரவிட்ட அதிகாரிக்கோ எந்தச் சிறு குண்டு யாரை, உடலின் எந்தப் பகுதியைத் தாக்கும்என்பதைத் தீர்மானிக்க முடியாது. போராட்டக்காரரையும் வழிப்போக்கரையும், பெரியவரையும் குழந்தையையும், தோளையும் கண்ணையும் இது வேறுபடுத்திப் பார்ப்பதில்லை. அதனால்தான்நிரந்தர ஊனம் என்பது இந்த ஆயுதத்தின் தற்செயலான விளைவல்ல — அதன் உள்ளார்ந்த குணமாகும். இந்தஉள்ளார்ந்த குணத்தை எந்த வழிமுறையாலும் நீக்க முடியாது என்பதே எங்கள் அடிப்படை வாதம்.

கேள்வி: இதை நீங்கள் ஒரு பரந்த வரலாற்றுப் போக்குடன் இணைக்கிறீர்களே?

ஆம். வரலாறு முழுவதும் அரசுகள் ஊனப்படுத்துதலைத் தண்டனையாகவும் அரசியல் கட்டுப்பாட்டு உத்தியாகவும் பயன்படுத்தி வந்துள்ளன. கண் பார்வையைப் பறித்தல், கை கால்களைவெட்டுதல் ஆகியவை பழங்கால அரசஅதிகாரத்தின் அடையாளங்கள். மிஷெல் ஃபூக்கோ தனது ‘Discipline and Punish’ நூலில் விவாதிப்பது போல், நவீனஅரசு இந்த வெளிப்படையான உடல் தண்டனைகளை விட்டு, கண்காணிப்பு மற்றும் ஒழுங்கின் வழியே ஆட்சிசெய்யத் தொடங்கியது. ஆனால் ஜாஸ்பீர் புவார் தனது ‘The Right to Maim’ நூலில் சுட்டிக்காட்டுவது போல், ஊனப்படுத்துதல் மறைந்துவிடவில்லை — புதியவடிவங்களை எடுத்திருக்கிறது. இன்று அது “பாதுகாப்பு”, “ஒழுங்கு”, “குறைந்த ஆபத்து” என்ற மொழியில் —காவல்துறை, ஆக்கிரமிப்பு, போர் மூலம் நிகழ்த்தப்படுகிறது. கொல்லும் உரிமையோடு (right to kill) சேர்ந்து, “ஊனப்படுத்தும் உரிமையையும்” (right to maim) அரசுகள் கையாளுகின்றன — மக்களை உயிரோடு வைத்திருந்து, ஆனால்வாழ்நாள் முழுவதும் அரசு வன்முறையின் விளைவைச் சுமக்கச் செய்வது.

கேள்வி: இது இந்தியாவுக்கு மட்டும் உரிய பிரச்சனையா?

இல்லை. வியட்நாம் போரில் பயன்படுத்தப்பட்ட ஏஜென்ட் ஆரஞ்ச் என்ற விஷ குண்டுகள், தலைமுறைகளாக ஊனங்களை உண்டாக்கியது; வியட்நாம், கம்போடியா, ஆப்கானிஸ்தான், அங்கோலா போன்ற நாடுகளில் புதைகுழி வெடிகுண்டுகள் லட்சக்கணக்கானோரின் கை கால்களைப் பறித்தன. இந்த அனுபவங்கள்தான் புதைகுழி வெடிகுண்டு தடை உடன்படிக்கைக்குவழிவகுத்தன. ஆனால் இந்தியா உட்பட பல முக்கிய நாடுகள் இன்னும் அதில்கையெழுத்திடவோ, ஏற்கவோ இல்லை.இந்தியாவுக்குள்ளேயே காஷ்மீரில்சிதறல் குண்டுகள், உத்தரப்பிரதேசத்தில் ‘ஆபரேஷன் லங்டா’ என்ற பெயரில் சந்தேக நபர்களைக் கால்களில் சுட்டு ஊனப்படுத்துதல் — இவை ஒரேபோக்கை வெளிப்படுத்துகின்றன: ஊனப்படுத்துவது என்பது ஒரு “ஏற்றுக்கொள்ளத்தக்க” தண்டனையாகவும் கட்டுப்பாட்டு உத்தியாகவும் மாறிவருகிறது.

கேள்வி: காஷ்மீர் அனுபவம் நமக்கு என்ன சொல்கிறது?

காஷ்மீரில் 2010 போராட்டங்களுக்குப் பிறகு “உயிர்கொல்லாத” மாற்றாகஅறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஆயுதம்,உண்மையில் பல்லாயிரக்கணக்கானோரைக் காயப்படுத்தியது. அப்போதைய முதல்வர் மெஹபூபா முஃதி சட்டமன்றத்திலேயே தெரிவித்தபடி, 2016 ஜூலை 8 முதல் 2017 பிப்ரவரி 27 வரை6,221 பேர் காயமடைந்தனர்; அவர்களில் 728 பேருக்குக் கண் காயங்கள், 54 பேருக்குப் பார்வைக் குறைபாடு. ஸ்ரீநகர்ஸ்ரீ மகாராஜா ஹரி சிங் மருத்துவமனையில் மருத்துவர்கள் நவீன கண் மருத்துவத்திலேயே அரிதாகக் காணப்படும்அளவுக்கு விழித்திரை பிரிதல், விழிக்கோளம் வெடித்தல், பார்வை நரம்பு சேதம் போன்றவற்றைப் பதிவு செய்தனர்.பலரும் மீண்டும் மீண்டும் அறுவை சிகிச்சைக்கு உள்ளாயினர்.

கேள்வி: இந்தப் புள்ளிவிவரங்களுக்குப் பின்னால் உள்ள

மனிதர்களைப் பற்றி...ஒவ்வொரு எண்ணிற்குப் பின்னும் மாற்றமுடியாமல் சிதைந்த ஒரு வாழ்க்கை இருக்கிறது. 2016-இல்,ஷோபியானைச் சேர்ந்த பதினான்கு வயது இன்ஷா முஷ்தாக் தன் வீட்டு ஜன்னல் வழியே பார்த்தபோது, சிறுகுண்டுகள் கண்ணாடியை உடைத்து அவளது இரு கண்களையும் தாக்கின. மருத்துவராக வேண்டும் என்று கனவுகண்ட அந்த மாணவி நிரந்தரமாகப் பார்வையிழந்தாள்; பிரெயில் முறையையும் பிறர் உதவியையும் நம்பி வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டாள். பத்தாண்டு காத்திருப்புக்குப்பிறகுதான் அவளுக்கு ₹41.16 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது. பதினெட்டு மாதக் குழந்தை ஹிபா நிஸ்ஸாரின்கண்ணில் — தாயின் மடியில் இருந்தபோது — சிறு குண்டு துளைத்துச் சென்றது. இவர்கள் யாரும் போராட்டத்தில்ஈடுபடவில்லை; அச்சுறுத்தலாகவும் இருக்கவில்லை. “ஏன் எனது எதிர்காலத்தை அழித்தார்கள்?” என்ற ஃபைல் ஃபிர்தௌஸியின் கேள்வி இந்த ஆயுதத்தின் கொடுமையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

கேள்வி: “உயிர்கொல்லாத ஆயுதம்” என்ற வாதத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?

அது ஆழமான தவறான வழிநடத்தல்.குறைவான நபர்களைக் கொல்கிறது என்பதற்காக ஒரு ஆயுதம் மனிதாபிமானமுள்ளதாகிவிடாது. இந்த ஆயுதங்கள் பார்வை பறிப்பு, மூளைக் காயம், முடக்குவாதம் போன்ற நிரந்தர ஊனங்களை உண்டாக்குகின்றன. ஒரு அரசு தன்காவல்துறை ஆயுதங்களை “எத்தனைபேரைக் குறைவாகக் கொல்கிறது” என்பதால் மட்டும் மதிப்பிடக் கூடாது —“எத்தனை பேரைத் தவிர்க்கக்கூடிய ஊனத்திற்கு உள்ளாக்குகிறது” என்பதையும் கேட்க வேண்டும். ஐ.நா. மனிதஉரிமைகள் ஆணையம் 2020 வழிகாட்டுதலில் தெளிவாகச் சொல்கிறது: ஒரே நேரத்தில் பல சிறு குண்டுகளைச் சுடும்ஆயுதங்கள் துல்லியமற்றவை; அவசியம், விகிதாசாரம் ஆகிய கொள்கைகளுக்கு அவை பொருந்தாது; உலோகச்சிறு குண்டுகள் ஒருபோதும் பயன்படுத்தப்படக் கூடாது.

கேள்வி: அரசியலமைப்பு அடிப்படையில் இதில் என்ன முரண்பாடு இருக்கிறது?

இந்திய அரசு ஊனமுற்றோர்உரிமைச் சட்டம் 2016-க்கும், ஐ.நா. உடன்படிக்கைக்கும் (UNCRPD) கட்டுப்பட்டுள்ளது. அவை தடைகளை அகற்றவும், பாகுபாட்டை எதிர்க்கவும், ஊனத்தைத் தடுக்கவும் அரசைக்கடமைப்படுத்துகின்றன. ஆனால் இங்கே அரசே தடைகளை அகற்றுவதற்குப் பதிலாக, ஊனத்தை உற்பத்திசெய்பவராக மாறுகிறது. அரசியலமைப்பின் 21வது பிரிவு கண்ணியத்துடன் வாழும் உரிமையை உறுதி செய்கிறது; 14, 19வது பிரிவுகள்சமத்துவத்தையும் அமைதியான ஒன்றுகூடல் உரிமையையும் காக்கின்றன. இந்த உரிமைகள் ஒருபோதும் பறிக்கப்படுவதில்லை. பலப்பிரயோகம் என்பது, சட்டப்பூர்வம்,அவசியம், விகிதாசாரம் ஆகிய சோதனைகளைத் தாண்ட வேண்டும்; பலம்எப்போதும் குறைந்தபட்ச தீங்கு விளைவிக்கும் வழியாகவே இருக்க வேண்டும். பார்வை பறிப்பை உண்டாக்கும் ஆயுதம் இந்தக் கட்டமைப்பில் பொருந்தவே பொருந்தாது.

கேள்வி: உச்சநீதிமன்றம் ஒரு “நடைமுறை விதிமுறை” (protocol) வகுக்கலாம் என்று பரிந்துரைத்ததே?

தலைமை நீதிபதி சூர்யகாந்த், முழுத் தடைக்குப் பதிலாக பயன்பாட்டை ஒழுங்குபடுத்தும் விதிமுறையைக்கோருமாறு பரிந்துரைத்தார். ஆனால் நாங்கள் கேட்கிறோம் — நிரந்தர ஊனம் என்பது எந்த ஆயுதத்தின்உள்ளார்ந்த குணமாக இருக்கிறதோ, அதை வெறும் நடைமுறை பாதுகாப்புகளால் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக மாற்ற முடியுமா? எந்த விதிமுறையும் இந்த உள்ளார்ந்த குணத்தை நீக்க முடியாது. உரிமைஅடிப்படையிலான அணுகுமுறை என்பது, முன்கூட்டியே கணிக்கக்கூடிய வகையில் வாழ்நாள் ஊனத்தைஉண்டாக்கும் ஆயுதங்களுக்கு சிவில்காவல்துறையில் இடமில்லை என்பதை ற்றுக்கொள்வதுதான். எனவே இது வெறும் காவல்துறை சீர்திருத்தப் பிரச்சனை அல்ல — இது ஒரு ஊனமுற்றோர் உரிமைக் கடமை, அரசியலமைப்புக் கடமை, மனிதக் கண்ணியத்தின்மீதான நமது கூட்டு உறுதிப்பாட்டின் சோதனை. ஒவ்வொரு முறை ஒரு சிதறல் குண்டு சுடப்படும்போதும், இன்னொரு இன்ஷா, இன்னொரு ஹிபா உருவாகும் அபாயம் இருக்கிறது.அதனால்தான் 447-க்கும் மேற்பட்ட அமைப்புகளின் ஆதரவுடன், நாங்கள் முழுத் தடையைக் கோருகிறோம்.

தி வயரில் வெளியான அவரது கட்டுரையின் அடிப்படையில் நேர்காணல் வடிவில்

தொகுப்பு : எஸ்பிஆர்

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.