முந்தய பக்கம்

பெடல் தறி நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம்

29 Sept 2026, 9:03 pm
பெடல் தறி நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம்
<p><strong>பெடல் தறி நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம்</strong></p><p>இராஜபாளையம், செப்.29-இராஜபாளையம் வட்டம் சேத்தூரில் புதிய ரக சேலைகளுக்கு கூலி உயர்வு வழங்க வேண்டும். சிஐடியு கைத்தறிநெசவாளர் சங்க உறுப்பினர்கள் மீது கூட்டுறவு சங்க மேலாளர் அளித்த புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளைத் திரும் பப் பெற வேண்டும் என்பனஉள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெடல் தறி நெசவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>சேத்தூர் மேட்டுப்பட்டி கூட்டுறவு நெசவாளர்கள் சங்கம் முன்பு சிஐடியு கைத்தறி நெசவாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு குருநாதன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் எம்.திருமலை தொடக்க உரையாற்றினார்.ஆர்ப்பாட்டத்தை வாழ்த்தி சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாரியப்பன், மேற்கு ஒன்றியச் செயலாளர் சந் தனகுமார் ஆகியோர் பேசினர். கைத்தறி தொழிலாளர் சங்க மாவட்டச்செயலாளர் ராமச்சந்திரன் சிறப்புரையாற்றினார்.இதில் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் மருது, சிவகணேசன், ராஜேந்திரன், பொன்னுச்சாமி, ஜானகி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram