தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அமைதியான தமிழகம் தொடர பாஜக, அதிமுக கூட்டணி தோற்கடிக்கப்பட வேண்டும்: பெ.சண்முகம் பேச்சு

11 Apr 2026, 5:30 am
அமைதியான தமிழகம் தொடர பாஜக, அதிமுக கூட்டணி தோற்கடிக்கப்பட வேண்டும்: பெ.சண்முகம் பேச்சு

அமைதியான தமிழகம் தொடர பாஜக, அதிமுக கூட்டணி தோற்கடிக்கப்பட வேண்டும்: பெ.சண்முகம் பேச்சு

திருப்பூர், ஏப்.10- "தொழில் நகரமான திருப்பூர் இப்போது இருப்பது போல அமைதியாகத் தொடர வேண்டுமென்றால், மதவெறி சக்திகளான பாஜக மற்றும் அதற்கு துணைபோகும் அதிமுக கூட்டணி இந்தத் தேர்தலில் முற்றிலுமாகத் தோற்கடிக்கப்பட வேண்டும்" என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் பேசினார்.

மார்க்சிஸ்ட் கட்சி திருப்பூர் மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற திருப்பூர் தொகுதி கட்சி உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்று அவர் பேசுகையில், பாஜகவை ஒரு சாதாரண அரசியல் கட்சியாக கருதக் கூடாது. கடந்த 10 ஆண்டுகளில் 200-க்கும் மேற்பட்ட மசோதாக்கள் எம்.பி., எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்குவதையே பாஜக ஒரு தொழிலாக செய்து வருகிறது.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் வழிகாட்டுதலில் இயங்கும் பாஜக, கடந்த 12 ஆண்டுகளில் மக்களுக்கு நன்மை செய்யாமல், தங்களது குறுகிய சிந்தனைகளை நடைமுறைப்படுத்துவதிலேயே குறியாக இருக்கிறது. ஆர்எஸ்எஸ் இயக்கம் இந்து முன்னணி, விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தள் போன்ற அமைப்புகள் நாட்டின் மதச்சார்பின்மைக்கும் ஜனநாயகத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளன.

திருப்பூரின் அமைதிக்கு ஆபத்து: திருப்பூர் தெற்குத் தொகுதியில் இந்து முன்னணி தலைவரின் மகன் பாஜக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். பயங்கரவாதி அவர்கள் வெற்றி பெற்றால் திருப்பூரில் அமைதி கெட்டு, தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும். குட்டி இந்தியா என அழைக்கப்படும் இந்த தொழில் நகரத்தில் மதவெறி சக்திகளுக்கு இடமில்லை.

நடிகர் விஜய் குறித்துப் பேசிய அவர், ஆர்எஸ்எஸ் இந்துத்துவ அமைப்பினால் கிறிஸ்தவர்கள் மற்றும் சிறுபான்மையினர் தாக்கப்படும்போது இதுவரை ஒரு முறை கூட விஜய் வாய் திறந்து கண்டிக்கவில்லை. சிறுபான்மை மக்களின் வாக்குகளைப் பிரிப்பதன் மூலம் திமுக கூட்டணியைத் தோற்கடிக்க விஜய்யை பயன்படுத்துப் பார்க்கிறார்கள். அவரால் ஒருபோதும் சிறுபான்மை மக்களைப் பாதுகாக்க முடியாது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.