போர்ப் பதற்றம் நீங்கி, உலகில் அமைதி நிலவ தஞ்சையில் அமைதிப் பேரணி
22 Mar 2026, 4:19 pm
<p><strong>போர்ப் பதற்றம் நீங்கி, உலகில் அமைதி நிலவ தஞ்சையில் அமைதிப் பேரணி</strong></p>
<p>தஞ்சாவூா், மார்ச் 22- தஞ்சையில், அருட்பெருஞ்ஜோதி அறக்கட்டளை வள்ளலார் பணியகம் சார்பில், போர் பதற்றம் நீங்கி உலகில் அமைதி நிலவ அமைதிப் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. வள்ளலார் பணியகம் தலைவர் சுந்தர்ராசன் தலைமை வகித்தார். வள்ளலார் அறக்கூழ்சாலை நடராசன் இறைவணக்கம் பாடினார். பேரணியை அருட்பெருஞ்ஜோதி அறக்கட்டளை சௌந்தர்ராஜன், மூர்த்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர். வள்ளலார் பணியகம் பொருளாளர் தியாகராஜன் அருட்சுடர் ஏந்தினார். இந்தப் பேரணி மேம்பாலத்தில் இருந்து புறப்பட்டு பல்வேறு இடங்களுக்குச் சென்று மீண்டும் அதே இடத்திற்கு வந்தடைந்தது. அப்போது ரஷ்யா - உக்ரைன் போர் மற்றும் ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் போர் முடிவுக்கு வந்து உலகில் அமைதி நிலவ வேண்டும். போர்ப் பதற்றம் நீங்கி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் என வலியுறுத்தி வேண்டிக் கொள்ளப்பட்டது. இந்த பேரணியில் நிர்வாகிகள் மற்றும் பல்வேறு மாவட்ட சன்மார்க்க அன்பர்கள் கலந்து கொண்டனர்.</p>
