தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வாய்ப்பு வாசல்

22 Jul 2026, 9:43 pm
வாய்ப்பு வாசல்

வாய்ப்பு வாசல்

பிடிஐஎல் நிறுவனத்தில் வாய்ப்பு

Project Development India Limited (PDIL) நிறுவனத்தில் Graduate Engineer மற்றும் Diploma Engineer பணியிடங்களுக்காக 99 காலியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. பொறியியல் பிரிவில் B.E./B.Tech முடித்து 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அதிகபட்ச வயது 32. ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும். நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவர். பொதுப்பிரிவு மற்றும் ஓபிசி பிரிவினர்கள் ரூ.800. இதர பிரிவினர்கள் ரூ.400 செலுத்தி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்கள் மற்றும் முழுமையான அறிவிப்பை https://www.pdilin.com/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூலை 27, 2026.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில்...

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (JNU) – Non-Teaching பிரிவில் 221 காலியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பம் வெளியாகியுள்ளது. Stenographer, Assistant Section Officer, Laboratory Assistant, Draftsman, Cook, Works Assistant, Engineering Attendant, Library Attendant, etc., போன்ற பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடத்திற்கு ஏற்ப 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, ITI, டிப்ளமோ, பட்டப்படிப்பு ஆகிய கல்வித்தகுதிகள் பெற்றிருக்க வேண்டும். அதிகபட்ச வயது 35 ஆண்டுகள். இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும். பொது, ஓபிசி பிரிவினர்களுக்கு ரூ. 1000. எஸ்சி/ எஸ்டி/பெண்கள் பிரிவினர்களுக்கு ரூ. 600 செலுத்தி விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு (Skill Test), வேலைத்திறன் தேர்வு (Trade Test), சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் மூலம் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவர். மேலும் முழுமையான அறிவிக்கை மற்றும் ஆன்லைன் விண்ணப்ப விவரங்களைப் பெற https://jnunt.samarth.edu.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூலை 27, 2026.

என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனத்தில்...

என்எல்சி இந்தியா லிமிடெட் (NLCIL) நிறுவனத்தில் Apprenticeship Training பயிற்சிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் Medical Lab Technician, Medical Lab Technician (Radiology), Conveyor Belt Vulcaniser உள்ளிட்ட பணிகளுக்கு மொத்தம் 45 பயிற்சியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. Medical Lab Technician (Pathology / Radiology) பாடப்பிரிவில் +2 வில் தேர்ச்சி பெற்று உயிரியல் (Biology) பாடப்பிரிவில் படித்திருக்க வேண்டும். கல்வித் தகுதி மற்றும் அதில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். ஜூலை 1, 2026 ஆம் தேதியன்று 18 வயது அடைந்திருக்க வேண்டும். பின்னர் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனை நடத்தப்படும். மேலும் தேர்வு நடைமுறை உள்ளிட்ட விவரங்களைப் பெற https://www.nlcindia.in என்ற இணையதளத்தை பார்வையிடலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 3, 2026 ஆகும்.

இந்தியன் ஆயில் நிறுவனத்தில்...

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) நிறுவனத்தில் ITI, Diploma மற்றும் Degree Apprentices பணியிடங்களுக்காக 1626 காலியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. Fitter, Electrician, Machinist, Instrument Mechanic, Data Entry Operator, Accountant, Graduate Apprentice, Technician Apprentice போன்ற பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 10ஆம் வகுப்பு, ITI, டிப்ளமோ, B.A., B.Com., B.Sc. மற்றும் பொறியியல் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். குறைந்தபட்ச வயது 18 முதல் அதிகபட்ச வயது 24 ஆகும். அரசு விதிகளின்படி எஸ்சி/எஸ்டி /ஓபிசி/ மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும். மேலும் கல்வித்தகுதி, பணியிட விவரங்கள் மற்றும் முழுமையான அறிவிப்பை பெற https://www.iocl.com/ என்ற இணையதளத்தில் பார்வையிடலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூலை 31, 2026.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.