தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தூய்மைப் பணியாளரை தாக்கியவர் மீது பி.சி.ஆர். சட்டத்தில் வழக்குப்பதிய வலியுறுத்தல்

19 Jan 2026, 2:23 pm
தூய்மைப் பணியாளரை தாக்கியவர் மீது பி.சி.ஆர். சட்டத்தில் வழக்குப்பதிய வலியுறுத்தல்
<p><strong>தூய்மைப் பணியாளரை தாக்கியவர் மீது பி.சி.ஆர். சட்டத்தில் வழக்குப்பதிய வலியுறுத்தல்</strong></p> <p>திருப்பூர், ஜன.19- திருப்பூர் மாநகராட்சியில் வேலை செய் யும் தூய்மைப் பணியாளரை சாதி பெயரை சொல்லி தாக்கிய பூக்கடை உரிமையாளர் நல் லுசாமி மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்பு &nbsp;சட்டத்தின் கீழ் பதிவு செய்யக்கோரி மாவட்ட &nbsp;ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட் டுள்ளது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் ஆட்சியர் மனிஷ் நாரணவரே தலை மையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் &nbsp;திங்களன்று நடைபெற்றது. இதில், தீண் டாமை அநீதிகளுக்கு எதிரான கூட்டமைப்பு சார்பில் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப் பதாவது, &nbsp;திருப்பூர் பெருமாள் கோவில் வீதி &nbsp;அருகே மாநகராட்சி பூ மார்க்கெட்டில் கடந்த &nbsp;ஜன.6 ஆம் தேதி பட்டியலின சமூகத்தை சேர்ந்த தூய்மைப் பணியாளர் லட்சுமி என்ப வரை அதிமுகவை சேர்ந்த &nbsp;நல்லுசாமி என்ப வர் தாக்கியுள்ளார். சாதிப் பெயரை சொல்லி, &nbsp;தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். &nbsp;இதுகுறித்த புகாரில் நல்லுசாமி மீது &nbsp;பெண்ணை தாக்கியது, தகாத வார்த்தைகள் பேசியது என்ற பிரிவுகளில் மட்டும் வழக் குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே பாதிப் புக்குள்ளாகி இருப்பவர், பட்டியல் சமூ கத்தை சேர்ந்த தூய்மைப் பணியாளர் என்ப தால், இந்த வழக்கை தீண்டாமை வன் கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு &nbsp;செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என &nbsp;கூறப்பட்டுள்ளது. மேலும் இக்கோரிக் கையை வலியுறுத்தி தரையில் அமர்ந்து கண் டன முழக்கங்கள் எழுப்பினர். மாநகராட்சி 11 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் செல்வராஜ் அளித்த மனுவில், 11 &nbsp;ஆவது வார்டுக்குட்பட்ட தண்ணீர் பந்தல் &nbsp;காலனி பகுதி நியாயவிலைக் கடையில் மேல் &nbsp;பகுதியில் சுருக்கி அமைத்து, &nbsp;தளம் அமைக்க &nbsp;வேண்டும். திலகர் நகர் நியாயவிலைக் கடை யில் கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும். புது காலனி நியாய விலைக் கடையின் முன்பு றம் சிமெண்ட் சீட் அமைக்க வேண்டும். இந்த &nbsp;பராமரிப்புப் பணிகளுக்கு மாநகராட்சி நிதி மற் றும் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம் பாட்டு நிதி பயன்படுத்த முடியாத நிலை இருப் ்பதால், &nbsp;சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து சீரமைப்பு &nbsp;பணிகளை மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. பட்டா வழங்க கோரிக்கை: திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டத் திற்கு உட்பட்ட பெதப்பம்பட்டி, ஆலமரத் தூர், தும்பலபட்டி, &nbsp;சனுப்பட்டி, இலுப்பநக ரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பட்டியலின பட்டியலின மக்கள் ஒரே வீட்டில் இரு குடும் பம், &nbsp;மூன்று குடும்பங்களாக வசித்து வருகின் றனர். இம்மக்களுக்கு வீடோ, நிலமோ இல்லை. தனியாக இடம் வாங்கி வீடு கட்டுவ தற்கு பொருளாதார வசதிகள் இல்லை. எனவே அப்பகுதியை சேர்ந்த 160 நபர்க ளுக்கும் இலவச வீட்டுமனை பட்டா வழங்க &nbsp;நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆதித்தமி ழர் சனநாயகப் பேரவையினர் மனு அளித்த னர். பரமசிவன் என்பவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, நெருப்பெரிச்சல் கிரா மம் எழில்நகரில் ரிசர்வ் சைட் 4.94 சென்ட் நிலம், நெருப்பெரிச்சல் பஞ்சாயத்துக்கு 2008 &nbsp;ஆம் ஆண்டு ஒப்படைக்கப்பட்டது. அப்போ தைய &nbsp;பஞ்சாயத்து மற்றும் தற்போதைய &nbsp;மாநகராட்சி நிர்வாகம் முறையாக வேலி அமைத்து அதனை பாதுகாக்க தவறியதால், ஒரு பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு கோயிலும், மற்றொரு பகுதியில் கட்டிடமும் கட்டப்பட் டுள்ளன. எனவே முறையாக அளவீடு செய்து &nbsp;ஆக்கிரமிப்பை அகற்றி, பூங்கா அமைக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. வெற்றி பார்வையற்ற மாற்றுத்திறனா ளிகள் நலச் சங்கம் அளித்த மனுவில், திருப் பூர் மாவட்டம் குடிமங்கலம் ஒன்றியம் பண் ணைக்கிணறு ஊராட்சிக்குட்பட்ட ஜல்லிப் பட்டி கிராமத்தில் 100 வீடுகளில் 500 க்கும் மேற் பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். வறுமைக் கோட்டிற்கு கீழ் வசிக்கும் இவர்கள் இப்பகுதி யின் சாலையோரங்களில் இயற்கை உபா தைகளை கழிப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்ப டுகிறது. எனவே அப்பகுதி 4 ஆவது வார்டின் &nbsp;கிழக்கே உள்ள காலி இடத்தில் பொது கழிப் பிடம் கட்டித்தர வேண்டும் என வலியுறுத்தப் பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.