பழனி சிபிஎம் வேட்பாளர் என்.பாண்டிக்கு ஆயக்குடி, டி.கே.என். புதூரில் எழுச்சிமிகு வரவேற்பு
9 Apr 2026, 5:30 am
<p><strong>பழனி சிபிஎம் வேட்பாளர் என்.பாண்டிக்கு ஆயக்குடி, டி.கே.என். புதூரில் எழுச்சிமிகு வரவேற்பு</strong></p><p>திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் பழனி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் என். பாண்டிக்கு நந்தவனப்பட்டியில் எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட்டது.</p><p>பழனி கிழக்கு ஒன்றியம் நந்தவனப்பட்டியில் கூட்டணிக்கட்சி தலைவர்களுடன் பிரச்சாரப் பயணம் தொடங்கியது. அப்போது, வேட்பாளர் என். பாண்டிக்கு தாரை, தப்பட்டை முழங்க மாலை அணிவித்தும் ஆரத்தி எடுத்தும் நந்தவனப்பட்டி மக்கள் வரவேற்பு அளித்தனர். இந்த பிரச்சாரத்தில் கூட்டணிக்கட்சி தலைவர்கள் தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர்.</p>
