தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஆகாயத்தாமரைச் செடிகள், குப்பைகள் குவிந்து பாழாகும் பழையாறு

31 May 2026, 10:15 pm
ஆகாயத்தாமரைச் செடிகள், குப்பைகள் குவிந்து பாழாகும் பழையாறு
<p><strong>ஆகாயத்தாமரைச் செடிகள், குப்பைகள் குவிந்து பாழாகும் பழையாறு</strong></p><p>நாகர்கோவில், மே 31- குமரி மாவட்டத்தில் பழமைவாய்ந்த பழையாறு, ஆகாயத்தாமரைச் செடிகள் மற்றும் பல்வேறு குப்பைகளால் ஆக்கிர மிக்கப்பட்டுள்ளது. இதனை உடனடியாக தூர்வாரி சீரமைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகர்கோ வில் மாநகரக்குழு வலியுறுத்தியுள்ளது. இது குறித்து கட்சியின் நாகர்கோவில் மாநகரச் சிபிஎம் செயலாளர் எஸ்.அரு ணாச்சலம் கூறியதாவது:குமரி மாவட்டத் தில் பழமைவாய்ந்த பழையாறு மகேந்திர கிரி மலையில் வடமேற்குத் திசையில் சுரு ளோடு பகுதியில் உற்பத்தியாகி 44கி.மீ தூரம் பயணித்து மணக்குடி பகுதியில் அரபிக்கடலில் கலக்கிறது. பல்வேறு கிரா மங்களின் குடிநீர் தேவையினை பூர்த்தி செய்வதோடு இந்த ஆற்றில் சோழர், பாண்டிய, சேர மன்னர்கள் ஆட்சிக்காலத் தின் போது கட்டப்பட்ட 13 தடுப்பணைகள் மூலம் 97 குளங்கள் வழியாக 15 ஆயி ரத்து 821 ஏக்கர் விவசாய விளைநிலங்கள் பயன்பெறுகின்றன. இந்நிலையில் பழையாற்றில் ஆகாயத் தாமரை செடிகள் முழுமையாக ஆக்கிர மித்து காட்சி அளிக்கின்றன. இதனால் மக்கள் பயன்படுத்த முடியாத நிலைக்கு இந்த ஆறு மாறி வருகிறது. ஆகாயத்தாமரைச் செடிகள் அடர்த்தி யாக படர்ந்து நீர் ஓட்டத்தை முழுமையாக தடுக்கிறது. இதனால் பாசனம் பாதிக்கப்படு வதோடு வெள்ளம் தடைபட்டு பாதிப்பு ஏற்படுத்தும் நிலை உள்ளது. இதன் இலை கள் நீர்பரப்பை மூடிவிடுவதால் சூரிய ஒளி உள்ளே புகாத நிலை ஏற்படுகிறது. இத னால் பைட்டோ பிளாங்க்டன் எனப்படும் சிறு தாவரங்கள் ஒளிச்சேர்க்கை செய்ய இயல்வதில்லை. ஆகாயத்தாமரை செடிகள் அழுகும் போது பாக்டீரியாக்கள் ஆக்சிஜனை அதிகம் பயன்படுத்துகின்றன. இதனால் நீரின் ஆக்சிஜன் அளவு அடி யோடு பாதிக்கப்படுவதோடு நீர் மாசுபாடு அடைந்து சுகாதாரச் சீர்கேடு ஏறபடுகிறது. அழியும் உயிரினங்கள் நீரில் ஆக்சிஜன் அளவு குறைவதால் இதில் வாழும் மீன்கள், நண்டு, நத்தை, தவளை உள்ளிட்ட பல்வேறு உயிரினங்களும் மடிந்து போகின்றன. இதனால் உணவு சங்கிலி முறிந்து பறவைகள், ஊர்வன போன்றவையும் பாதிக்கப்படுகின்றன. மேலும் நாகர்கோவில் பகுதி வரை இந்த ஆற்றில் தண்ணீர் சுத்தமாக வரு கிறது. ஆனால் நாகர்கோவிலை தொட்ட வுடன் குப்பைகள், கழிவு நீர் கலந்து மாசுபடு கிறது. மயானங்களில் எரிக்கப்படும் பிணங்கள் எரிந்தும் எரியாத நிலையிலும் ஆற்றில் விடுகின்றனர். அதற்குப் பின்னால் அந்த தண்ணீர் முற்றிலும் மாசுபட்டு அதனை பயன்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டு விடுகிறது. பழையாற்றை தூர் வாரி தூய்மையாக்க மாவட்ட நிர்வாகம் நட வடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.