மார்க்ஸ் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
14 Mar 2026, 2:57 pm
<p><strong>மார்க்ஸ் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை</strong></p>
<p>மாமேதை காரல் மார்க்ஸின் 143 வது நினைவு தினத்தையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், கடலூர் கட்சி அலுவலக வளாகத்தில் உள்ள காரல் மார்க்ஸ் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெ.ராஜேஷ் கண்ணன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் கோ.மாதவன் மாலை அணிவித்தார். மாநகர செயலாளர் ஆர். அமர்நாத், மாவட்ட குழு உறுப்பினர்கள் ஆர். ஆளாவந்தார், எஸ்.கே. பக்கிரான், கண்ணன், வெங்கடேசன், ஜெயபாண்டியன், சௌமியா, போக்குவரத்து ஓய்வு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கரன், எழுத்தாளர் சங்க மாநில குழு உறுப்பினர் பால்கி, மாநகர குழு உறுப்பினர்கள் ஸ்டாலின், கருணாகரன், பாபு, தேவநாதன், மனோரஞ்சிதம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
<p> </p>
