தீக்கதிர் முக்கிய செய்திகள்
21 Jun 2026, 9:08 pm

காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா

பிரதமர் மோடி, டொனால்டு டிரம்ப்பை ‘மேதகு’ என்று தொடர்ந்து அழைத்துக் கொண்டே இருக்கிறார். அவர்களது உரையாடலைப் பார்க்கும்போது, இரு நாட்டு அரசாங்கங்களின் தலைவர்கள் சந்திப்பது போல் தெரியவில்லை; மாறாக, ஒரு நிறுவனத்தின் உரிமையாளரிடம் ஒரு முகவர் பேசுவது போல்தான் தோன்றியது.

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஆஷிஷ் ஜோஷி

பேராசைகளைக் கடந்து, நேர்மையைக் கடைப்பிடிப்பதும், அனைத்து மனிதர்களையும் சமமாகப் பார்க்கும் மனப்பக்குவத்தை வளர்ப்பதுமே உண்மையான யோகாவாகும். ஆனால், ஒரு நபர் தந்திரங்கள், துரோகம், கட்சிகளை உடைப்பது, எம்பிக்களை விலைக்கு வாங்குவது மற்றும் ஜனநாயகத்தை அழிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டுக்கொண்டு யோகா செய்வதில் என்ன பயன் இருக்கிறது?

ஆர்ஜேடி செய்தி தொடர்பாளர் பிரியங்கா பார்தி

ஒரே ஒருமுறைதான் நீட் வினாத்தாள் கசிவு நடந்துள்ளது என்று பாஜகவினர் கூறுகின்றனர். ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் 90-க்கும் மேற்பட்ட வினாத்தாள் கசிவுகள் நடந்துள்ளன. இதனால் 6.5 கோடிக்கும் அதிகமான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 3 நாட்களில் மட்டுமே 4 மாணவர்கள் தங்களது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். இதுதான் உண்மை.

அவுட்லுக் நிறுவனர் சபீர் பாட்டியா

நீட் வினாத்தாள் கசிவுக்குக் காரணம் என்று கூறி டெலிகிராம் செயலியைத் தடை செய்யும் இந்திய அரசு, வறுமை, குப்பைக் கூளங்கள், நம்பமுடியாத ஜிடிபி புள்ளிவிவரங்கள் ஆகியவற்றின் பொறுப்பிலிருந்தும் தன்னை இவ்வாறுதான் விடுவித்துக் கொள்ள்ளப் போகிறதா? என்ற சந்தேகம் எழுகிறது.