பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி செயல்வீரர்கள் கூட்டம்
3 Apr 2026, 6:05 pm
<p><strong>பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி செயல்வீரர்கள் கூட்டம்</strong></p>
<p>தஞ்சாவூர், ஏப். 3- மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தஞ்சை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் டி.பழனிவேல் தலைமை வகித்தார். நகரத் திமுக செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார். கூட்டத்தில் முன்னாள் ஒன்றிய நிதித்துறை இணையமைச்சரும், திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினருமான எஸ்.எஸ். பழநிமாணிக்கம் சிறப்புரையாற்றினார். பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சி திமுக வேட்பாளர் கா. அண்ணாதுரை உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு பேசினார். முன்னாள் எம்.எல்.ஏக்கள் ஏனாதி பாலசுப்ரமணியன், காமராஜ், நகராட்சித் தலைவர் சண்முகப்பிரியா செந்தில்குமார், தலைமைக் கழகப் பேச்சாளர் மணிமுத்து, திமுக ஒன்றியச் செயலாளர்கள் கோவிந்தராசு, இளங்கோ, ராமநாதன், மெய்யநாதன், முருகானந்தம், தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் மகேந்திரன், மதிமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயபாரதி விசுவநாதன், தேமுதிக தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் பூபேஷ்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு உறுப்பினர் பக்கிரிசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் கந்தசாமி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பட்டுக்கோட்டை மாவட்டச் செயலாளர் சக்கரவர்த்தி, திராவிடர் கழக மாவட்டச் செயலாளர் தென்னவன் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி, தமிழர் தேசம் கட்சி, மக்கள் நீதி மய்யம், மூவேந்தர் முன்னேற்றக் கழகம், எஸ்டிபிஐ உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் உள்பட 2,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.</p>
