பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகமா? தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு கடும் கண்டனம்
1 hour before
<p><strong>பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகமா? தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு கடும் கண்டனம்</strong></p><p>சென்னை, செப்.14-சென்னை பட்டினப்பாக் கத்தில் ரூ.1,200 கோடி மதிப்பில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவைக் கைவிடக்கோரி தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு (சிஐடியு) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து அமைப்பின் மாநிலத் தலைவர் ஆர்.லோகநாதன், செயலாளர் எஸ்.அந்தோணி ஆகி யோர் வெளியிட்டுள்ள அறிக்கை யில், பட்டினப்பாக்கம் பகுதியில் 25.55 ஏக்கரில் புதிய தலைமைச் செயல கம் அமைந்தால் நொச்சிக் குப்பம், சீனிவாசபுரம் உள்ளிட்ட 9 மீனவக் குடியிருப்பு களைச் சேர்ந்த 1,500-க்கும் மேற்பட்ட குடும்பங்களின் பாரம்பரிய வாழ்வாதாரம் அழியும் எனக் குறிப்பிட்டுள்ளனர். மேலும், ஆலிவ் ரிட்லி ஆமைகள் முட்டையிடும் இக் கடலோரப் பகுதியில் பிரம்மாண்டக் கட்டடங்கள் கட்டுவது கடல் சூழலியலையும் பாதிக்</p><p>கும் என்று எச்சரித்துள்ளனர்.உயர் பாதுகாப்பு மண்டலமாக மாறுவதால் பொது மக்களின் கடற்கரை அணுகல் மறுக்கப்படுவதோடு சாந்தோம் பகுதியில் கடும்போக்குவரத்து நெரிசல் ஏற்படும் எனவும் சுட்டிக்காட்டி யுள்ளனர். எனவே, மீனவர்களிடம் ஆலோசிக்காமல் எடுக்கப்பட்ட இத்தன்னிச்சை யான முடிவைக் கைவிட்டு, சூழலியலுக்கு உகந்த மாற்று இடத்தை அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும், மீனவர் களின் உரிமைக்கான போராட்டங்களுக்குச் சங்கம் துணை நிற்கும் என்றும் வலி யுறுத்தியுள்ளனர்.</p>
