பட்டாபிராமில் தூய்மைப் பணியாளர்களுக்கு அரசு சேவைகள் முகாம்
4 Nov 2026, 11:41 pm
<p><strong>பட்டாபிராமில் தூய்மைப் பணியாளர்களுக்கு அரசு சேவைகள் முகாம்</strong></p><p>ஆவடி, நவ.4-ஆவடி மாநகராட்சி சார்பில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கான அரசு சேவைகள் வழங்கும் முகாம் பட்டாபிராமில் நடைபெற்றது. இம்முகாமை மாநகராட்சி ஆணையர் எல்.அம்பிகா ஜெயின் தொடங்கி வைத்தார்.முகாமில் 210 தூய்மைப் பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு மருந்துகள்வழங்கப்பட்டன. மேலும், தாட்கோ நலத்திட்ட அடையாள அட்டைகள், வருவாய்த்துறை சான்றிதழ்கள் மற்றும் வங்கிக் கடன்களுக்கான விண்ணப்பங்களும் பெறப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.</p><p>நிகழ்வில் துணை ஆணையர் டிட்டோ, உதவி ஆணையர் சதீஷ், மாநகர நல அலுவலர் சரஸ்வதி, துப்புரவு அலுவலர்கள் முகைதீன், குமார், சுகுமார், கண்ணன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.</p>
