தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பட்டாபிராமில் ஆபத்தான நிலையில் மின்மாற்றி போர்க்கால அடிப்படையில் சீரமைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

16 May 2026, 1:52 am
பட்டாபிராமில் ஆபத்தான நிலையில் மின்மாற்றி போர்க்கால அடிப்படையில் சீரமைக்க   மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

பட்டாபிராமில் ஆபத்தான நிலையில் மின்மாற்றி போர்க்கால அடிப்படையில் சீரமைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

பட்டாபிராம்,மே 15- ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட பட்டாபிராம் பகுதியில், ஆபத்தான நிலையில் உள்ள மின்மாற்றியை உடனடியாகச் சீரமைக்கக் கோரி தமிழ்நாடு மின்சார வாரியத்திடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோபாலபுரம் கிளை சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

பட்டாபிராம் 20-வது வார்டு, குறிஞ்சிமா நகர் தேவர் தெருவில் அமைந்துள்ள தமிழ்நாடு மின்வாரியத்திற்குச் சொந்தமான மின்மாற்றியைத் தாங்கி நிற்கும் மின்கம்பங்கள் மிகவும் பழுதடைந்துள்ளன.

எந்த நேரத்திலும் இந்த மின்கம்பங்கள் உடைந்து விழுந்து பெரும் விபத்தை ஏற்படுத்தும் வகையில் மிகவும் பலவீனமாக இருப்பதாகப் பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

முக்கிய வழித்தடம் இந்த மின்மாற்றி அமைந்துள்ள தேவர் தெருவானது, குறிஞ்சிமா நகர் பகுதியிலிருந்து பூந்தமல்லி நெடுஞ்சாலையை இணைக்கும் மிக முக்கியமான வழித்தடமாகும்.

மேலும், இப்பகுதியிலுள்ள நூற்றுக்கணக்கான குடியிருப்புகளுக்கு இந்த மின்மாற்றி மூலமாகவே மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது.

இதனால் மின்கம்பங்கள் சேதமடைந்தால் ஒட்டுமொத்தப் பகுதியும் இருளில் மூழ்கும் அபாயம் உள்ளது.

சிபிஎம் கோரிக்கை இது தொடர்பாகச் சேர்க்காடு துணை மின் நிலைய உதவிப் பொறியாளரிடம் அளிக்கப்பட்டுள்ள மனுவில், "பொதுமக்களின் உயிருக்கும் உடைமைக்கும் ஆபத்து ஏற்படும் முன்னே, பழுதடைந்த மின்கம்பங்களை மாற்றிவிட்டு மின்மாற்றியின் உறுதியை உறுதிப்படுத்த வேண்டும்.

போர்க்கால அடிப்படையில் இதற்கான நடவடிக்கைகளை மின்சார வாரியம் எடுக்க வேண்டும்" என வலியுறுத்தப்பட்டுள்ளது.

விபத்துக்கள் நடப்பதற்கு முன்பே மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோபாலபுரம் கிளைச் செயலாளர் பா. ரகுராமன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதிகாரியின் உறுதிமொழி இந்நிலையில் குறிஞ்சி மாநகர் பகுதியில் பழுதடைந்துள்ள மின்மாற்றியைச் சீரமைப்பது தொடர்பாக, கடந்த வியாழக்கிழமை (மே 14) ஆவடி செயற்பொறியாளரை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்தப் பழுதுநீக்கல் பணிகளைத் தடையின்றி மேற்கொள்வதற்குத் தேவையான மின்தடை அனுமதியை வழங்குமாறு அவரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

மக்களின் பாதுகாப்பு நலன் கருதி விடுக்கப்பட்ட இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட செயற்பொறியாளர், பணிகளை மேற்கொள்வதற்கான மின்தடைக்கு அனுமதி அளிப்பதாகவும், இதற்கான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்.

எனவே இப்பணிகளை விரைந்து முடிக்கவேண்டும் என்று அப்பகுதி சிபிஎம் நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.