30 ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு பீடித் தொழிலாளர் குடும்பங்களுக்கு பட்டா பொதுமக்கள் மகிழ்ச்சி
22 Feb 2026, 3:26 pm
<p><strong>30 ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு பீடித் தொழிலாளர் குடும்பங்களுக்கு பட்டா பொதுமக்கள் மகிழ்ச்சி</strong></p>
<p>திருவள்ளூர், பிப். 22- திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை காவாக்கரை பகுதியில் பல தலைமுறைகளாகக் குடிசை மற்றும் ஓட்டு வீடுகளில் வசித்து வந்த 23 பீடித் தொழி லாளர் குடும்பங்களுக்கு, நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தற்போது குடி மனைப் பட்டா கிடைத்துள்ளது. இப்பகுதியில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் இஸ்லாமியச் சிறுபான்மையினர் மற்றும் பீடி சுற்றும் தொழிலையே வாழ்வாதாரமாகக் கொண்டவர்கள். மிகவும் குறைந்த கூலியில் நலிந்த நிலை யில் வாழ்ந்து வரும் இவர்களுக்கு, தாங்கள் குடியிருக்கும் இடத்திற்குப் பட்டா இல்லாதது பெரும் கவலையாக இருந்து வந்தது. இந்நிலையில், செங்கை மாவட்ட பீடித் தொழிலாளர்கள் சங்கத்தில் (சிஐடியு) இணைந்த பிறகு, கூலி உயர்வு உள்ளிட்ட சலுகைகளுடன் பட்டா கோரிய போராட்ட மும் தீவிரமடைந்தது. பட்டா கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவ லகம், திருவள்ளூர் மற்றும் ஊத்துக் கோட்டை வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பு கடந்த 30 ஆண்டுகாலமாகப் பீடித் தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங் களைத் தொடர்ந்து நடத்தி வந்தனர். இந்த நிலையில், மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் பிப். 13 அன்று ஊத்துக்கோட்டை வட்டாட்சியர், 23 குடும்பத்தினருக்கு மெய்யூர் ஊராட்சியில் உள்ள குருபுரத்தில் குடிமனைப் பட்டாக்களை வழங்கினார். இதனைச் செங்கை மாவட்ட பீடித் தொழி லாளர்கள் சங்க நிர்வாகிகள் வெகுவாக வரவேற்றுள்ளனர். பீடி சங்கத்தினர் வேண்டுகோள்: பட்டா கேட்டு விண்ணப்பித்துள்ள பெரும்பாலான தொழிலாளர்களுக்கு இன்னும் பட்டா கிடைக்காமல் விடு பட்டுள்ளது. அவர்களுக்கு உடனடியாக பட்டா வழங்க வேண்டும் மற்றும் பட்டா பெற்ற அனைவருக்கும் 'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தின் கீழ் தொகுப்பு வீடுகளை வழங்க வேண்டும் எனச் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். இந்நிகழ்வில் சங்கத்தின் கௌரவத் தலைவர் ப.சுந்தரராசன், மாவட்டத் தலைவர் டி.ஆர்.பலராமன், மாவட்டச் செயலாளர் எம்.கே.முருகன், பொருளாளர் என்.முத்துக்குமார், மாவட்டத் துணைச் செயலாளர் டி.டில்லி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் வி.சரளா, ஜெ.சலீம், ஆர்.நாகராஜ், திரு. எஸ்.சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
<p> </p>
